by satheesh on | 2026-02-14 07:44 AM
15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேசன் கடை பணியாளர்கள் தேனி மண்டல பெரியகுளம் இணைபதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் :
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள தேனி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ரேசன் கடை பணியாளர்கள் ஊதிய உயர்வு,பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்குதல், ஓய்வு பெற்ற நியாய விலைக் கடை பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்குதல்,அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் பொட்டலங்களாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் குருசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் அய்யனார் வரவேற்புரையாற்றினார்.நிர்வாக அமைப்புச் செயலாளர் ஜெயபிரகாஷ்,மாநிலச் செயலாளர்கள், காமாட்சி முருகேசன், பாண்டி,போராட்ட குழு தலைவர் நாகேந்திரன்,பிரச்சார குழு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர். மாநில பொருளாளர் பொன். அமைதி.சிறப்புரையாற்றினார்.மாவட்ட பொருளாளர் முத்துராயர் நன்றி உரையாற்றினார். சுமார் 400 க்கும் மேற்பட்ட நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதி - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!