by admin on | 2026-02-13 07:25 PM
தேனி கிழக்கு மாவட்டம் கடமலை - மயிலை ஒன்றியத்தில் விடியா திமுக அரசை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு.
கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,
125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்க முயலும் விடியா திமுக அரசைக் கண்டித்து தேனி கிழக்கு மாவட்டம் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எம்.ராமர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடமலை-மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டி காளை முன்னிலை வகித்தார்.
தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை ராமர், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், அமமுக மாவட்ட செயலாளர் காசிமாயன், பாரதிய பார்வேர்ட் பிளாக் மாவட்டத் தலைவர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று உரையாற்றினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஹரிஹரன் நன்றி...!!!!
தேனி மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து மாஸ் காட்டிய அதிமுக....!!!
திமுக அரசை கண்டித்து முருக்கோடை ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
அஞ்சி" ஆயிரம் கொடுப்பதா ? இபிஎஸ் காட்டம் !
மீண்டும் சர்ச்சை...! தவெக சேலம் கூட்டம்...! ஒருவர் உயிரிழப்பு...!