| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் TVK

மீண்டும் சர்ச்சை...! தவெக சேலம் கூட்டம்...! ஒருவர் உயிரிழப்பு...!

by Vignesh Perumal on | 2026-02-13 04:40 PM

Share:


மீண்டும் சர்ச்சை...! தவெக சேலம் கூட்டம்...! ஒருவர் உயிரிழப்பு...!

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்ரவரி 13, 2026) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தின் போது, வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி திடலில் இன்று தவெக நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதாவது, சூரஜ் (37) இவர் வடமாநிலமான மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். கடந்த 20 ஆண்டுகளாகச் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரசமரத்து காட்டூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சேலத்தில் உள்ள வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

விஜயின் பேச்சைக் கேட்பதற்காகவும், அவரை நேரில் காண்பதற்காகவும் சூரஜ் இன்று காலை முதலே திடலில் காத்திருந்துள்ளார். மதிய நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.

அங்கிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவர் விரைவாகச் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி சூரஜ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, இன்றைய சேலம் கூட்டத்திற்குச் சேலம் மாநகரக் காவல் துறை 51 கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தது. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி.

10 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

கியூ.ஆர் (QR) கோடு கொண்ட நுழைவுச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், வெயில் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது கட்சித் தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.








நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment