by aadhavan on | 2026-02-12 11:51 AM
» மு. ஆதவன்
உலகிலேயே மிக உயரமான, வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 140 அடி உயர திருவுருவ சிலை அமைக்கப்பட உள்ளது.
உலக முதலியார்கள் வேளாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் கப்பலோட்டிய தமிழர், தேசத்தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிரம்மாண்ட திரு உருவச்சிலை அமைக்கப்பட உள்ளது. சிலை அடிக்கல் நாட்டு விழாவிற்கான கலந்துரையாடல் கூட்டம் மதுரை தல்லாகுளம் குமார் மெஸ் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் அமைப்பின் (எய்ம்பா) நிறுவனத் தலைவர் 'ஓம் சக்தி' ராமச்சந்திரன் தலைமையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநில பொது செயலாளர் ரகுராம் பிள்ளை, பொருளாளர் ரவி முதலியார், மாநில துணை தலைவர் ராமச்சந்திரகுமார் பிள்ளை, தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் தனவேலன் பிள்ளை முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 'எய்ம்பா' நிறுவனத் தலைவர் 'ஓம் சக்தி' ராமச்சந்திரன் பேசியதாவது;
இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. தேசத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரரான அவரை கௌரவப்படுத்தும் பொருட்டு உலகிலேயே மிகப்பெரிய சிலை மதுரையில் அமைக்கப்பட இருக்கிறது. ஏ.சி.எஸ்., அறக்கட்டளை இந்த சிலைக்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா, பிப்ரவரி 22ஆம் தேதி, மதுரையில் நடக்கிறது.
140 அடி உயரத்தில் அமைய உள்ள சிலைக்கு, துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டுகிறார். சிலையின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, இன்னும் 18 மாதங்களில் பிரதமர் மோடி இதனைத் திறந்து வைக்க உள்ளார்.
இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக இந்த சிலை அமையும்."
இவ்வாறு அவர் பேசினார்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!