by admin on | 2026-02-10 08:34 PM
தேனியில் மாணவர்களுக்கு நடைபெற்ற வேதியியல் செய்முறைத் தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (10.02.2026) 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற வேதியியல் செய்முறைத் தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செய்முறைத் தேர்வு என்பது மாணவர்களின் நடைமுறை அறிவையும், திறமையையும் வெளிப்படுத்தும் முக்கியமான தேர்வு ஆகும். அதனடிப்படையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு செய்முறை பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 02.03.2026 அன்று தொடங்கப்பட உள்ளது. அறிவியல் மற்றும் தொழிற்கல்விப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்த மாணவ, மாணவிகளுக்கு நேற்று (09.02.2026) தொடங்கப்பட்டு, 14.02.2026 வரை நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் செய்முறைத் தேர்வுக்காக 118 மையங்கள் அமைக்கப்பட்டு, 13,500 மாணவர்கள் தேர்வை எழுதுகிறார்கள். செய்முறைத் தேர்வினை கண்காணிப்பதற்காக 652 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்தில் ஆய்வுக்கூடம் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் உள்ளதா எனவும், தேவையான உபகரணங்கள் போதிய அளவில் உள்ளனவா என்றும், மின் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், தீயணைப்புக்கருவி (Fire Extinguisher) மற்றும் முதலுதவிப்பெட்டி (First Aid Box) தயார் நிலையில் உள்ளனா என்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வெளிப்புற ஆய்வாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை தந்துள்ளார்களா என்றும், மாணவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இவ்வாய்வில் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!