by satheesh on | 2026-02-10 01:47 PM
*பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு டிப்ஸ்: படிக்கும்போதும் கவனத்தை அதிகரிக்க உதவும் 5 முறைகள்!*
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருகிறது. மாணவர்கள் தீவிரமாக தேர்விற்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் மாணவர்களுக்கு உதவும் முக்கிய விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம். பொதுவாகமே படிக்கும் மாணவர்கள் தேர்விற்கான அழுத்தம் இல்லாமல் படிப்பது அவசியமாக உள்ளது. தேர்வு நெருங்கும் நேரத்தில் பதற்றத்தில் மாணவர்கள் ஏற்கெனவே நன்கு படித்த பதில்களை மறக்க நேரிடுகிறது. சில நேரங்களில் குழப்பம் ஏற்படுகிறது. படிக்கும்போது, பதிலை புரிந்துகொண்டு கவனமாக படிப்பது அவசியமாகும். அந்த வகையில் மாணவர்களின் கவனத்தை அதிகரிக்க அறிவியல் ரீதியான சில முறைகள் பின்பற்றப்படுகிறது. மாணவர்களுக்கு பயனுள்ளதாக கூறப்படும் 5 முறைகளை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
1.*போமோடோரோ நுட்பம் (Pomodoro Technique)* : படிப்பதற்கு மட்டுமின்றி, வேலைப் பார்பவர்களுக்கு உதவும் முக்கிய அம்சம் போமோடோரோ நுட்பம் ஆகும். இது மிகவும் எளிது ஆகும். ஒருவர் படிக்கும்போது தொடர்ந்து இடைவெளியின்றி 25 நிமிடங்கள் படிக்க வேண்டும். அதன் பின்னர் 5 நிமிடங்கள் இடைவெளி விட வேண்டும். அந்த இடைவெளி நேரத்தில் வேறு எதும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். இந்த சிறிய இடைவெளி கனவ சிதறல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், மீண்டும் படிக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. இடைவெளி நேரத்தில் படித்ததை அமைதியாக ஞாபகப்படுத்திக்கொள்ள உதவும்.
2.*நினைவூட்டுதல்* : இந்த முறையை நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும், படித்ததை நினைவூட்டுதல் ஒரு தலைப்பில் உள்ள பதில்களை புரிந்துகொள்ள உதவுவதாக கூறப்படுகிறது. ஒரு கேள்விக்கான பதிலைப் படித்து அதனை நிவைப்படுத்தி என்னென்ன முக்கிய விஷயங்கள் அதில் உள்ளன என்பதை வரிசைப்படுத்தவும். இது ஒரு கேள்விக்கான பதிலாக மட்டுமின்றி, ஒரு தலைப்பை சார்ந்து கேட்கப்படும் பல்வேறு கேள்விகளுக்கான பதிலாக அமையும்.
3.*ஃபெய்ன்மேன் நுட்பம்* : இது மிக எளிதான ஒரு முறையே, குறிப்பாக அறிவியல் பாடங்களை படிக்கும் நபர்களுக்கு இந்த முறை நிச்சயம் உதவியாக இருக்கும். புரிந்துகொள்ள கடினமாக உள்ள வார்த்தைகளை எளிமைப்படுத்து, பதிலை எழுதுவது ஆகும். அறிவியல் பாடங்களில் இருக்கும் வார்த்தைகள் கடினமாக இருந்தால், அதனை புரிந்துகொள்ளும் வகையில் எளிமைப் படுத்து எழுதி வைத்துப் படிக்கும் ஒரு முறை ஆகும். கடினமாக இருக்கிறது என மனப்பாடம் செய்யாமல், அந்த பதிலை புரிந்துகொண்டு படிக்க இந்த முறை உதவியாக இருந்து வருகிறது.
4.*சுய விளக்க அளித்து படித்தல்* : இந்த முறையை பலர் பயன்படுத்துகிறார்கள். பதிலை படித்து, அவர்களுக்கு அவர்களே விளக்கிக்கொண்டு படிப்பது ஆகும். தாங்கள் மட்டுமே படிக்காமல், அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுத்துப் படிக்கும்போது இன்னும் உதவியாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி சொல்லிக்கொடுத்தோ அல்லது தனக்கு தானே சொல்லிக்கொண்டு படிக்கும்போது விரைந்து புரிந்துகொள்ள முடியும் என கூறப்படுகிறது.
5.*குறியீட்டு முறை* : வார்த்தைகளை பார்த்துப் படிப்பதை விட அதனை வரைப்படமாகவோ, Mind Map, புகைப்படம் ஆகியவை கொண்டு படிப்பது எளிதான புரிதலை உண்டாக்கும். குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில் உலக வரைப்படம், இந்திய வரைப்படம் ஆகியவை கொண்டு படிப்பது எளிதாக்கும். ஞாபகத்திற்கு கொண்டு வந்து பதிலளிக்கவும் உதவியாக இருக்கும். இந்த முறையை பள்ளிகளில் கற்பிக்கும்போது ஆசிரியர்கள் பயன்படுத்திகிறார்கள். ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதும் Mind Map போன்ற அமைப்பை பயன்படுத்துவது பதிலை எளிமையாக்குவதுடன், உங்களுடைய புரிதலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார். பெரியகுளம். தேனி.
தேனியில் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு....!!!!
போடி பண மோசடி - முக்கிய குற்றவாளி கைது - திண்டுக்கல் போலீஸ் அதிரடி. !
பரீட்சை எழுதப் போறீங்களா? - உடனே இதை பண்ணுங்க. !
சட்டவிரோத லாட்டரி விற்பனை - "அதிர்ஷ்டம்" அவதிப்படும் ஏழைக் குடும்பங்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட் !
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !