by satheesh on | 2026-02-09 07:28 PM
டெல்லி : இன்று (பிப்ரவரி 9, 2026) காலை 9 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 1:11 மணியளவில் பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், வரும் பிப்ரவரி 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக உஷாரான டெல்லி காவல்துறை மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து சென்று மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். மோப்ப நாய்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் சிக்காததால், இது ஒரு வதந்தி (Hoax) என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், நாடாளுமன்றத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, இந்த மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!