| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?

by satheesh on | 2026-02-09 07:10 PM

Share:


காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம்  - சுணங்கும் நிர்வாகிகள்  - காரணம் என்ன. ?

காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம்.... போட்டியிட ஆர்வம் இல்லை - காரணம் என்ன.?
 
தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தேமுதிக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற இன்றைய தினம் நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை. இதற்கான காரணம் என்ன.?
 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அடுத்தடுத்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக, பாமக, அமமுக, காங்கிரஸ் என பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட விருப்புவர்கள் விருப்பமனு வழங்கப்பட்டு நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட  விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கி வரும் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்பமான பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.பொது தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் நாள் ஏராளமானோர் ஆர்வமாக போட்டியிட விருப்பமனுவை பெற்று சென்றனர். 4வது நாளான இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள நிலையில் எந்த ஒரு கட்சி நிர்வாகிகளும் விருப்ப மனு வாங்க வரவில்லை. விருப்பமனுவை விநியோகிப்பதற்காகவே அங்கு  தனித்தனியாக இரண்டு மேஜைகள் அமைக்கப்பட்டு அங்கு விருப்ப மனு வழங்குபவர் காத்துக் கொண்டுள்ளனர்.  ஆனால், இன்று யாரும் விருப்ப மனுவை வாங்க ஒரு சிலரை தவிர பெரிய அளவில் யாரும் வரவில்லை. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெளிச்சோடி காட்சியளித்தது. சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக, தவெக என அனைத்து கட்சியும் ஆர்வம் காட்டி விருப்ப மனுக்கள் விநியோகித்து வரும் நிலையில் விருப்ப மனுக்கள் வாங்குவதற்கு கூட ஆள் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதை தேமுதிகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் கூறுகையில், தேமுதிக கூட்டணியானது இன்னும் யாருடன் கூட்டணியை உறுதி செய்யவில்லை. அஷ்டமியால் ஆர்வம் காட்டாத நிர்வாகிகள் : மேலும் அப்படி கூட்டணியை அதிமுக அல்லது திமுகவுடன் உறுதி செய்தாலும் அதிகபட்சமாக 7 முதல் 8 தொகுதி மட்டுமே கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுத்தொகுதிக்கு 15ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லையென்றே கூறப்படுகிறது. மேலும்  இன்றைய தினம் அஷ்டமி என்ற காரணத்தால் மட்டுமே யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லையெனவும் தேமுதிக வட்டார தகவலாக உள்ளது.

இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment