| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் திருவாரூர்

திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!

by Vignesh Perumal on | 2026-02-09 01:28 PM

Share:


திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!

திருவாரூரில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே ஆதரவு திரட்டும் வகையில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் சார்பில் தீவிரப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் இன்று பிப்ரவரி 12-ம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆதரித்து திருவாரூர் நகரில் பிரம்மாண்ட பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த எழுச்சிமிகு பிரச்சார இயக்கத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி (AITUC) மாவட்டத் தலைவர் தோழர் ஜெ.குணசேகரன் தலைமை தாங்கினார். அனைத்து மத்திய தொழிற்சங்கங்களான CITU, AITUC, INTUC, LPF, SKM, UTUC ஆகியவை ஒன்றிணைந்து இந்தப் போராட்டக் களத்தை ஒருங்கிணைத்தன.

இந்தப் பிரச்சாரத்தில் பல்வேறு சங்கங்களின் முன்னணித் தலைவர்கள் கலந்துகொண்டு வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்து உரையாற்றினர். CITU சார்பில், மாவட்டச் செயலாளர் தோழர் MKN.அனிபா, மாவட்டத் தலைவர் கே.பி. ஜோதிபாசு, மாவட்டப் பொருளாளர் கே. கஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் R.மாலதி. INTUC சார்பில், மண்டலத் தலைவர் ராஜீவ் காந்தி.

SKM (விவசாயிகள் அமைப்பு) சார்பில், தோழர்கள் எஸ்.தம்புசாமி, பி.கந்தசாமி, என்.பவுன்ராஜ்.

LPF சார்பில், ஆட்டோ சங்கத் தலைவர் R.ராஜாஜி.

AITUC சார்பில், தோழர்கள் K.காளிமுத்து, கூடூர் G.குணசேகரன், S.சிவானந்தம், தர்மதாஸ். அங்கன்வாடி சங்க மாநிலச் செயலாளர் தோழர் V.தவமணி, தையல் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் கே. ரேவதி, மருத்துவக் கல்லூரி சார்பில் பி.சசிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவாரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்தத் தாரை தப்பட்டை முழக்கங்களுடன் கூடிய பிரச்சாரப் பயணம், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

விளமல் பகுதியில் தொடங்கிய இந்தப் பயணம், மேல கடைவீதி வழியாகத் தொடர்ந்தது. வடக்கு வீதி, கீழவீதி மற்றும் மகாராஜா சில்க்ஸ் எதிர்புறம் என நகரின் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விளக்க உரைகள் ஆற்றப்பட்டன.


இறுதியில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இந்தப் பிரச்சார இயக்கம் எழுச்சியுடன் நிறைவடைந்தது.

"மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளால் சாதாரண ஏழை எளிய மக்களும், தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், பொதுத்துறையைப் பாதுகாக்கவும் இந்தப் போராட்டம் அவசியமானது" எனப் பிரச்சாரத்தின் போது தலைவர்கள் வலியுறுத்தினர்.







செய்தி - இளங்கோவன் திருவாரூர் 


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment