| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !

by satheesh on | 2026-02-08 07:16 PM

Share:


நகைக் கடன் தள்ளுபடி  -  அடுத்த ஜாக்பாட்?  - எதிர்பார்ப்பில் மக்கள்   !

நகை அடகு தள்ளுபடி. - ஆஃபர் கிடைக்குமா?  :கூட்டுறவு வங்கிகளை பொறுத்தவரை பயிர் கடன், நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறு வணிகக் கடன் மற்றும் வாகனக் கடன் எனப் பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு 7 சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. இதர கடன்களுக்கு 9 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி நகை மற்றும் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதும், அதற்கான நிதி வங்கிகளுக்கு அண்மையில் முழுமையாகக் கிடைத்ததும் மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்னும் 2 மாசத்தில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது. இந்த சூழலில், கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகும் என்று மக்கள் பலமாக நம்புகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்கான கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கு போட்டியாக ஆளும் கட்சியான தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடத் தயாராகி வருகிறது. இதன் காரணமாகவே, மக்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைக் காட்டிலும், புதிய கடன்களைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நபார்டு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் பெறுவது மற்றும் பொதுமக்களின் டெபாசிட் தொகைகளைக் கொண்டே இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதேசமயம், குடும்பச் செலவுகள் மற்றும் திருமணங்களுக்காக 10 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் புதிய கடன் திட்டத்தை அறிவிக்க அரசும் ஆலோசித்து வருகிறது. அரசியல் லாபங்களுக்காகக் கூட்டுறவு வங்கிக் கடன்களைப் பயன்படுத்துவது நிதிச் சுமையைத் தரும் என்ற கவலைகளுக்கு மத்தியிலும், தள்ளுபடி எனும் ஒற்றை எதிர்பார்ப்பால் மக்கள் கடன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் தொகை 85,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது 13,000 கோடி ரூபாய் அதிகமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாகும். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இது குறித்து சில கவலைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.. நபார்டு வங்கியில் குறைந்த வட்டிக்குப் பெறப்படும் நிதி மற்றும் பொதுமக்களின் டெபாசிட் தொகைகளைக் கொண்டே இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. எனவே, அரசியல் காரணங்களுக்காக கூட்டுறவு வங்கிகளை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது என்றும், இது வங்கிகளின் நிதி நிலைமையை பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கிடையே, திருமணம் போன்ற குடும்ப தேவைகளுக்காக 10 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிவிக்க அரசு ஆலோசித்து வருவது கடன் பெறுவோரின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணை ஆசிரியர்  : N.சதீஷ்குமார்,  பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment