| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்...! அதிநவீன இயந்திரங்கள்...! ரூ. 3,250 கோடி முதலீடு...!

by Vignesh Perumal on | 2026-02-08 06:01 PM

Share:


5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்...! அதிநவீன இயந்திரங்கள்...! ரூ. 3,250 கோடி முதலீடு...!

அமெரிக்காவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, சுமார் 5 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது சென்னை மறைமலைநகர் ஆலையில் உற்பத்தியைத் தொடங்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2021-ல் இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த ஃபோர்டு, தற்போது மீண்டும் ஒரு பிரம்மாண்ட முதலீட்டுடன் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளது.

ஃபோர்டு நிறுவனம் மறைமலைநகர் ஆலையில் ரூ. 3,250 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மற்றும் ஆலை நவீனமயமாக்கல் பணிகள் வரும் ஜூன் மாதம் முதல் முழுவீச்சில் தொடங்கப்பட உள்ளன. இந்த ஆலையில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன எஞ்சின்கள் மற்றும் பவர் ட்ரெயின்கள் தயாரிக்கப்படும்.

சென்னையில் தயாரிக்கப்படும் இந்த எஞ்சின்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இது சென்னையை மீண்டும் உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றும்.

இந்த புதிய முதலீட்டின் மூலம் சுமார் 600-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.

ஆலையைச் சுற்றியுள்ள உதிரிபாகத் தொழிற்சாலைகள் மீண்டும் புத்துயிர் பெறுவதால், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஃபோர்டு நிறுவனத்தின் வருகை, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின் போது, ஃபோர்டு நிறுவனத்தின் உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழக அரசின் தொடர் அழுத்தம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் முன்னெடுப்புகள் காரணமாக, ஃபோர்டு தனது ஆலையை விற்காமல் மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர முடிவெடுத்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஏற்கனவே கையெழுத்தாகிவிட்ட நிலையில், தற்போது ஜூன் மாதம் முதல் பணிகள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2021-ல் நஷ்டம் காரணமாக ஃபோர்டு நிறுவனம் தனது இந்தியத் தொழிற்சாலைகளை மூடியது. குஜராத் மாநில ஆலையை டாடா மோட்டார்ஸ் வாங்கிய நிலையில், சென்னை ஆலை மட்டும் விற்கப்படாமல் இருந்தது. தற்போது, ஃபோர்டு தனது "Ford+" திட்டத்தின் கீழ், இந்தியாவைத் தனது உலகளாவிய உற்பத்தித் தளமாக பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment