by satheesh on | 2026-02-06 02:25 PM
பறவைக் காய்ச்சல் பரவல் - தமிழக அரசு எச்சரிக்கை :
உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது. உயிரிழக்கும் பறவைகள் மற்றும் பசு மாடுகளை எரிக்க வேண்டும் அல்லது ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும். கோழிப் பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக்கூடாது. ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்பவர் பல பண்ணைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ, கோழி இறைச்சியையோ கொண்டுவரக்கூடாது. தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.
காகங்கள் இறப்பு - பொதுமக்களே உஷார் ; சென்னை அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காகங்களில், பறவைக் காய்ச்சலுக்கான H5N1 வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், பண்ணை உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளது. காகங்கள், கோழிகள், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தால் அதனை மனிதர்கள் வெறும் கையினால் தொட வேண்டாம். 8 -10 அடி ஆழத்தில் அதனை புதைக்க வேண்டும் அல்லது எரித்துவிட வேண்டும். உடனடியாக உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சென்னையில் பொதுமக்களுக்கு பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.
இணை ஆசிரியர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!