by admin on | 2026-01-28 03:30 PM
தேனி மாவட்டம இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ”இது நம்ம ஆட்டம் – 2026” போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் தேனி மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் 25.01.2026 மற்றும் 27.01.2026 ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்றது. மேலும், தேனி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 30.01.2025 (வெள்ளி) அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த வெற்றியாளர்கள் (தடகளம், கபடி, கையுந்துபந்து, கேரம், கயிறு இழுத்தல் (ஆண்கள்/பெண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்), எறிபந்து (பெண்களுக்கு மட்டும்), மாவட்டஅளவில் ஓவியப்போட்டி (ஆண்கள்/பெண்கள்), கோலப்போட்டி (பெண்களுக்கு மட்டும்), மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உறுப்புசார் குறைபாடுடையோர் (100மீ), பார்வைத்திறன் குறைபாடுடையோர் (குண்டுஎறிதல்), அறிவுசார் திறன் குறைபாடுடையோர் (100மீ), காதுகேளாதோர் (100மீ) ஆகியோருக்கு 13 வகையான போட்டிகள் 30.01.206 (வெள்ளி) அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.ஆன்லைன் மூலம் பதிவு செய்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள வீரர்/வீராங்கனைகள் ஆதார்கார்டு/குடும்ப அடையாள அட்டை (ரேசன்கார்டு), மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அடையாளஅட்டை (ID card) மற்றும் ஆதார்கார்டு/ குடும்ப அடையாள அட்டை (ரேசன்கார்டு) ஆகிய ஆவணங்களை தங்களுக்குரிய பிரிவு விளையாட்டு நாட்களில் நேரில் வரும் பொழுது கொண்டு வர வேண்டும். மேலும், தங்கள் விளையாட்டு பிரிவுகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களுடன் (Play Kit) போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த வீரர்கள்/அணிகள் மற்றும் நேரடி மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள விளையாட்டு வீரர்கள் தவறாமல் போட்டி நடைபெறும் நாட்களில் காலை 7.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனுமதி இல்லை. நேரடி மாவட்ட விளையாட்டு போட்டிகளுக்கு மட்டும் நிகழ்விட பதிவு (Spot Entry) அனுமதி உண்டு. ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்/வீராங்கனைகள் மட்டுமே மாவட்ட அளவில் பங்கேற்க முடியும். மாவட்ட அளவில் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகளுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதியம் உணவு வழங்கப்படும்.ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்தவீரர்/வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைகள் மற்றும் பயணப்படி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 6பேர் படுகாயம் ;
சட்ட விரோத நபர்கள் வெளியேற்றம் - திருப்பதி திருமலை போலீஸ் அதிரடி. !
ஆடுகளம் தகவல் தொடர்பு மொபைல் எண் 9514000777 கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்....!!!!
எம்.எல்.ஏ மீது பாலியல் புகார்...! கட்சியிலிருந்து நீக்கம்...! 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு..!
இன்று ஒரே நாளில் ரூ.5,200 உயர்வு..! புதிய உச்சம்...!