| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

எம்.எல்.ஏ மீது பாலியல் புகார்...! கட்சியிலிருந்து நீக்கம்...! 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு..!

by Vignesh Perumal on | 2026-01-28 03:08 PM

Share:


எம்.எல்.ஏ மீது பாலியல் புகார்...! கட்சியிலிருந்து நீக்கம்...! 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு..!

ஆந்திர மாநிலம் அண்ணாமையா மாவட்டம், ரயில்வே கோடூரு தொகுதி ஜனசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஆரவா ஸ்ரீதர் மீது பெண் அரசு ஊழியர் ஒருவர் சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமைப் புகார்கள் ஆந்திர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது, "வேலை வாங்கித் தருவதாகக் கூறி பழகிய எம்.எல்.ஏ ஆரவா ஸ்ரீதர், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக" அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

தனது விருப்பத்திற்கு மாறாக எம்.எல்.ஏ கட்டாயப்படுத்தியதால், தான் 5 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாக அப்பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்திய போது, எம்.எல்.ஏ தனது கணவரைத் தொடர்பு கொண்டு விவாகரத்து செய்யச் சொல்லி மிரட்டியதாகவும், தனது குழந்தையைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஜனசேனா கட்சியின் தலைவரும் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் உத்தரவின் பேரில் கட்சி தலைமை பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

புகாரின் உண்மைத்தன்மையை ஆராய டி. சிவசங்கர், தம்பள்ளபள்ளி ரமாதேவி மற்றும் டி.சி. வருண் ஆகிய 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து 7 நாட்களுக்குள் எம்.எல்.ஏ ஆரவா ஸ்ரீதர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, எம்.எல்.ஏ ஆரவா ஸ்ரீதர் கட்சியின் அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் கோடூரு போலீசார் எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSRCP) கட்சியினர் இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வே இது போன்ற செயலில் ஈடுபட்டது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைக் காட்டுவதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.

இதனிடையே, ஆரவா ஸ்ரீதரின் தாய் பிரமீளா இந்தச் செய்திகளை மறுத்துள்ளார். "அந்தப் பெண் திட்டமிட்டு எனது மகனைப் பிளாக் மெயில் செய்கிறார், உண்மையை நீதிமன்றம் நிரூபிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment