by admin on | 2026-01-27 03:57 PM
தேனி மாவட்டம் முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா ‘இது நம்ம ஆட்டம் – 2026’ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (27.01.2026) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா ‘இது நம்ம ஆட்டம் – 2026’ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ”இது நம்ம ஆட்டம் – 2026” போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில்
16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய அளவில் தடகளம், கபடி, கையுந்துபந்து, கேரம், கயிறு இழுத்தல் –(ஆண்கள்/பெண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் - (ஆண்களுக்கு மட்டும்), எறிபந்து -(பெண்களுக்கு மட்டும்) ஆகியப் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடந்த 25.01.2026 அன்று போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தப்பட்டது.
அதன்தொடர்ச்சியாக இன்றையதினம் 1.பெரியகுளம் - அரசு
மேல்நிலைப்பள்ளி, வடுகப்பட்டி, 2.கடமலைக்குண்டு (மயிலாடும்பாறை) - ஜி.ஆர்.வி.மேல்நிலைப்பள்ளி. 3.ஆண்டிப்பட்டி - அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசாரிப்பட்டி
4.தேனி – மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதன் அடையாளமாக தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதலிடம் பெறும் வீரர்/ வீராங்கனைகள் மற்றும் அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதிபெறுவர். மேலும், ஓவியப் போட்டி,(ஆண்கள்/பெண்கள்) கோலப்போட்டி–(பெண்களுக்கு மட்டும்), மாற்றுத்திறனாளிகள் 30.01.206 (வெள்ளி) அன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் நேரடியாக கலந்து கொள்ளலாம். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !