by admin on | 2026-01-27 02:58 PM
தேனி மாவட்டம் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் 708 கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (27.01.2026) உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் 708 கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் மாணவர்களின் கைகளில் எதிர்காலம் உள்ளது என்பதையும், அதை மேம்படுத்தும் விதமாக இன்றைய இளைய தலைமுறையினரின் திறன்மேம்பாடு மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும்"உலகம் உங்கள் கையில்" திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 05.01.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார். தொடர்ந்து கல்லூரி வாரியாக மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது
அதனடிப்படையில், இன்றுமுதல் தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைக்கும் விதமாக, 708 தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார். தேனி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4355 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி தமிழரசி, கல்லூரி தாளாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர் 9842337244
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !