| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Kanniyakumari

விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !

by satheesh on | 2026-01-27 02:02 PM

Share:


விதி மீறும் வாகனங்கள்  - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை  !

*டாரஸ் வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு – எஸ்.பி. எச்சரிக்கை* ;

மாவட்டத்தில் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், காலியாக மாவட்டத்திற்குள் நுழையும் கனரக டாரஸ் வாகனங்களுக்கு புதிய நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஆர்.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுவரை, காலியாக வரும் கனரக டாரஸ் வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, விபத்து தடுப்பு நடவடிக்கையாக இனிவரும் காலங்களில் இவ்வகை வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

நேரக் கட்டுப்பாட்டை மீறும் வாகனங்கள்

அதிவேகமாக செல்லும் டாரஸ் வாகனங்கள்

குடிபோதையில் வாகனம் இயக்குபவர்கள்

அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்

உரிய வாகன சான்றிதழ்கள் இன்றி இயக்கப்படும் வாகனங்கள்

சரியான எண் பலகை இன்றி வரும் வாகனங்கள்

ஆகியவை மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்குவது மாவட்ட காவல்துறையின் இலக்கு என்றும், இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இணை ஆசிரியர்  ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment