| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

தவெகவிற்கு அழைத்த செங்கோட்டையன்..! டிடிவி தினகரன் அதிரடித் தகவல்..! எம்.எல்.ஏ சந்திப்பு..!

by Vignesh Perumal on | 2026-01-27 01:25 PM

Share:


தவெகவிற்கு அழைத்த செங்கோட்டையன்..!  டிடிவி தினகரன் அதிரடித் தகவல்..! எம்.எல்.ஏ சந்திப்பு..!

அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகியான உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் குறித்துப் பல ரகசியங்களை உடைத்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து பல நிர்வாகிகள் திமுக மற்றும் தவெக-விற்குச் சென்று வரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ-வான ஐயப்பன் இன்று டிடிவி தினகரனைச் சந்தித்தார். ஏற்கனவே அதிமுக, பாஜக மற்றும் அமமுக ஆகியவை கூட்டணி அமைத்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பும் இந்தக் கூட்டணியில் இணைவது குறித்தோ அல்லது அமமுகவுடன் இணைவது குறித்தோ இந்த ஆலோசனையில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசியதாவது, "நான் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக்கு வருவேன் என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் அவர்கள் பெரிதும் நம்பினார். அவர் தவெக-வுடன் கூட்டணி அமைக்க என்னை வற்புறுத்தினார். செங்கோட்டையன் அவர்கள் என் மீது கொண்ட அன்பினால் அந்த விருப்பத்தைத் தெரிவித்தார். பெரியவர் என்பதால் அதை என்னால் உடனே மறுக்க முடியவில்லை. அதனால் அவரிடம் 'பார்க்கலாம்' என்று மட்டும் கூறினேன்."இதன் மூலம், அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் தவெக-வுடன் கூட்டணி வைக்கத் திரைக்குப் பின்னால் முயற்சி செய்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தினகரன் விளக்குகையில், "தமிழகத்தில் மீண்டும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே எனது ஒரே லட்சியம். சிதறிக் கிடக்கும் சக்திகள் ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். அதற்காகவே, பழைய கசப்புகளை மறந்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சேர முடிவு செய்தேன்." வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் போன்றவர்கள் வெளியேறிய நிலையில், எஞ்சியிருக்கும் நிர்வாகிகளும் தங்களது அரசியல் எதிர்காலத்திற்காகத் தினகரனை நாடி வருகின்றனர். அதிமுகவின் மூத்த தலைவர்களே விஜய் கட்சியின் பக்கம் ஒரு கண் வைத்துள்ளனர் என்பது தினகரனின் பேச்சின் மூலம் உறுதியாகியுள்ளது. 2026 தேர்தலில் அதிமுக - பாஜக - அமமுக கூட்டணி உறுதியாகக் களமிறங்குவதைத் தினகரன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment