| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

முட்டை, மூட்டையாக வெடி மருந்துகள் பறிமுதல் - பெரும் சதி முறியடிப்பு - அதிர்ச்சி தகவல். !

by satheesh on | 2026-01-27 01:08 PM

Share:


முட்டை, மூட்டையாக வெடி மருந்துகள் பறிமுதல்  - பெரும் சதி முறியடிப்பு - அதிர்ச்சி தகவல். !

பெரும் சதி முறியடிப்பு : ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் (Nagaur) மாவட்டத்தில், ஒரு விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் வெடிபொருட்களை ராஜஸ்தான் போலீசார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். சோதனையில் 187 மூட்டை வெடிமருந்துகள், 9 அட்டைப் பெட்டிகளில் இருந்த டெட்டனேட்டர்கள்  மற்றும் ஏராளமான பியூஸ் ஒயர்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக 58 வயதான சுலைமான் கான் (Suleman Khan) என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த வெடிபொருட்கள் எதற்காகச் சேமிக்கப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மிகப்பெரிய வெடிமருந்து வேட்டை ஒரு பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளது.

இணை ஆசிரியர்  ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment