| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

5 பேர் கைது...! பணம் பறிமுதல்...! அதிரடி நடவடிக்கை...!

by Vignesh Perumal on | 2026-01-27 12:37 PM

Share:


5 பேர் கைது...! பணம் பறிமுதல்...! அதிரடி நடவடிக்கை...!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாட்டம் நடைபெறுவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் 5 பேர் பிடிபட்டனர். தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில், சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் போலீசார் இன்று தாடிக்கொம்பு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாடிக்கொம்பு, ஐஸ்வர்யா கார்டன் அருகே உள்ள ஒரு தோட்டத்துப் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கூடி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்குச் சோதனையிட்டபோது 5 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்துச் சூதாடிக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.குறிப்பாக, காளிமுத்து, சக்திவேல், சின்னக்கண்ணன், ராமச்சந்திரன், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 5 பேர் மீதும் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது இடங்களில் அல்லது மறைவான பகுதிகளில் இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தாடிக்கொம்பு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment