| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

அத்துமீறிய ஆட்டோக்கள் - அதிர்ச்சி கொடுத்த கலெக்டர். !

by satheesh on | 2026-01-26 11:21 PM

Share:


அத்துமீறிய ஆட்டோக்கள் - அதிர்ச்சி கொடுத்த கலெக்டர். !

சாதாரண உடையில் நள்ளிரவு வேட்டை: ஆட்டோ ஓட்டுநர்களை அதிரவைத்த எர்ணாகுளம் கலெக்டர் :

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சில நேரங்களில் உயர் அதிகாரிகள் களத்தில் இறங்குவதுண்டு. அந்த வகையில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா, கொச்சி மாநகரில் நள்ளிரவில் விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்களைக் பிடிக்கத் தானே நேரடியாகக் களமிறங்கினார். சாதாரண பேண்ட் மற்றும் முழுக்கை சட்டை அணிந்து, ஒரு சராசரிப் பெண்ணைப் போல நள்ளிரவில் கலெக்டர் பிரியங்கா ஆட்டோ சவாரிக்கு முயன்றார். அவருடன் போக்குவரத்து அதிகாரிகளும் சாதாரண உடையில் ரகசியமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாக்குவாதம்: ஒரு ஆட்டோவை மறித்த கலெக்டர், "ஏன் மீட்டர் போடவில்லை?" எனக் கேட்டார். தன்னிடம் கேள்வி கேட்பது கலெக்டர் எனத் தெரியாத ஓட்டுநர், "இரவு நேரத்தில் மீட்டரில் ஓட்டினால் நாங்கள் எப்படிச் சம்பாதிக்க முடியும்?" என்று எகத்தாளமாகத் திருப்பிக் கேட்டார். அதிர்ச்சி: உடனே அங்கிருந்த அதிகாரிகள் அவர் மாவட்ட கலெக்டர் என்பதை விளக்கியதும், அந்த ஓட்டுநர் அதிர்ச்சியில் உறைந்து போனார். கலெக்டர் தலைமையில் 6 குழுக்கள் நடத்திய இந்த அதிரடி சோதனையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன மொத்தம் 365 ஆட்டோக்கள் சோதிக்கப்பட்டதில், 174 ஆட்டோக்களுக்கு விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டது. 72 ஆட்டோக்களில் மீட்டரே இல்லை என்பது கண்டறியப்பட்டு, உடனடியாகப் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. தனது ஆய்வின் முடிவில், ஆட்டோ ஓட்டுநர்களுக்குக் கலெக்டர் பிரியங்கா முக்கியமான அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக, "பெண்களுக்குப் பாதுகாப்பான பயணச் சூழலை உறுதி செய்ய வேண்டும் மற்றும் கனிவான ஆட்டோ கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இணை ஆசிரியர்  ;  N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment