| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

ரேஷன் அரிசி கடத்தல் - வாகனம் பறிமுதல் - தப்பி ஓடிய கடத்தல் காரர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!

by satheesh on | 2026-01-26 08:44 PM

Share:


ரேஷன் அரிசி கடத்தல்  - வாகனம் பறிமுதல் - தப்பி ஓடிய கடத்தல் காரர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!

போச்சம்பள்ளி அருகே பரபரப்பு: 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - தப்பியோடிய கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு ;

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் போச்சம்பள்ளி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி அறிவுறுத்தலின்படி, போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் ரகமத்துல்லா, தனி வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், வட்ட பொறியாளர் தனசேகரன் குழுவினர் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாளேத்தோட்டம் - சிப்காட் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் டாடா சுமோ கார் ஒன்று நீண்ட நேரமாக ஸ்டார்ட் செய்யப்பட்ட நிலையிலேயே நின்று கொண்டிருந்தது. அதிகாரிகள் அந்த காரை அணுகியபோது, அதிலிருந்த நபர்கள் அதிகாரிகளைக் கண்டதும் காரை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடினர். பின்னர் காரைச் சோதனையிட்டபோது, அதில் மூட்டை மூட்டையாக சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் கார் ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டு, போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனர். தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, காரின் உரிமையாளர் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.


இணை ஆசிரியர்  ; N.சதீஷ்குமார், பெரியகுளம் .தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment