| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

திடீரென ஆம்னி பஸ்சை சுற்றி வளைத்த அதிகாரிகள் - கட்டுக்கட்டாக பணம் - நள்ளிரவில் திக்.! திக் .!!

by satheesh on | 2026-01-26 08:07 PM

Share:


திடீரென ஆம்னி பஸ்சை சுற்றி வளைத்த அதிகாரிகள் - கட்டுக்கட்டாக பணம்  - நள்ளிரவில் திக்.!  திக் .!!

பெங்களூரில் இருந்து சென்ற ஆம்னி பஸ்.. நள்ளிரவில் சுற்றி வளைப்பு.. பெட்டியை திறந்து ஆடிப்போன அதிகாரி ;

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுவுக்கு வயநாடு வழியாக நேற்று அதிகாலை ஆம்னி பஸ் ஒன்று சென்றது. இந்த ஆம்னி பஸ்சில் ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பெங்களூருவில் இருந்து சென்ற ஆம்னி பஸ்ஸை வயநாடு அருகே நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.31 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை கைது செய்தனர். வரி ஏய்ப்பு செய்யப்பட்ட கறுப்புப் பணத்தைப் பரிமாற ஹாவாலா முறை பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற தேசவிரோதச் செயல்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் இது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பதால், ஏஜென்ட் ஏமாற்றிவிட்டால் சட்டப்படி புகார் அளிக்க முடியாது. இந்தியாவில் FEMA மற்றும் PMLA ஆகிய சட்டங்களின் கீழ் ஹவாலா பரிமாற்றம் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே முறையற்ற வகையில் கணக்கில் காட்டாத பணத்தை ஏஜெண்டுகள் மூலம் கடத்துவதை ஹாவாலா பணம் என்கிறார்கள்.இப்படி கடத்தி செல்லப்படும் பணத்தை கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். அத்துடன் கடத்தியவரையும் கைது செய்வார்கள். அப்படித்தான், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுவுக்கு வயநாடு வழியாக நேற்று அதிகாலை ஆம்னி பஸ் ஒன்று சென்றது. இந்த ஆம்னி பஸ்சில் ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கலால்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதையடுத்து கலால்துறை அதிகாரிகள் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே தோல்பெட்டி பகுதியில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அங்கு வந்த சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தை, கலால்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது பஸ்சியில் பயணம் செய்த வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், அந்த வாலிபர் வைத்திருந்த பையை கைப்பற்றி முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது அதற்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மேலும் அந்த பணத்திற்கான எந்தவொரு ஆவணமும் வாலிபரிடம் இல்லாததும், ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது இதையடுத்து ரூ.31 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளி பகுதியை சேர்ந்த முகமது ஷாகிர்(வயது 28) என்பதும், அதேபகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஹவாலா பணத்தை கொடுக்க பெங்களூருவில் இருந்து ஆம்னி பஸ்சில் கொண்டு செல்ல முயற்சி செய்ததும் தெரியவந்தது. கைதான அவரிடம் பெங்களூருவில் யாரிடம் இருந்து பணம் பெறப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இணை ஆசிரியர்  ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment