by admin on | 2026-01-26 01:33 PM
தேனி மாவட்ட தேனி மாவட்டம் 77-ஆவது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.01.2026) நடைபெற்ற 77-ஆவது குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டு, காவல்துறை படைப்பிரிவுகளை பார்வையிட்டு. அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய
காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், 80 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், தன்னார்வ நிறுவனங்களுக்கு கேடயங்களையும் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள்/பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, சிறப்பாகப் பணியாற்றி 84 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்துறை பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாகப் பணிபுரிந்த 6 மருத்துவர்களுக்கும், 3 சிறந்த சமூகநீதி விடுதிக் காப்பாளர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12–ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி அளித்த 18 பள்ளி ஆசிரியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக பொறுப்பான்மை நிதியிலிருந்து நிதி பங்களிப்பு வழங்கிய 4 வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும், தேவாரம் செட்டிகுளம் கண்மாயில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்ட பாராசூட் கல்பவ்ரிக்ஷா நிறுவனத்திற்கு (parachute kalpavriksha foundation) கேடயங்கள் மற்றும் நற்சான்றிதழ்களையும், காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 177 அலுவலர்கள் / பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1,04,245/- மதிப்பிலான ஸ்மார்ட் போன் மற்றும் தையல் இயந்திரங்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66,900/- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.62,764/- மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் மற்றும் தேய்ப்புப் பெட்டிகளையும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.12,00,000/- மானியத்தில் குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் பெறுவதற்கான ஆணையினையும், விபத்து நிவாரணமாக 1 நபருக்கு ரூ.2,00,000/- மற்றும் 5 பயனாளிகளுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளையும், ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.31,00,000/- மதிப்பிலான கனவு இல்லத்திற்கான சாவிகளையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 03 பயனாளிகளுக்கு சுய தொழில் மானியமாக ரூ.6,90,000/-மும், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.5,25,000/- மதிப்பீட்டில் பசுமைக்குடில், ரூ.80,000/- மதிப்பீட்டில் வெங்காய சேமிப்பு கிட்டங்கி அமைப்பதற்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.61,200/- மதிப்பிலான புல்வெட்டு இயந்திரம், மண்புழு உரப்படுகை, சுழல் கலப்பையினையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 20 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.59,00,000/- சுய தொழில் கடனுதவி பெறுவதற்கான ஆணைகளையும், தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 05 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையான அட்டைகளையும் என மொத்தம் 80 பயனாளிகளுக்கு ரூ.1,19,90,109/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
பின்னர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெரியகுளம், அரசு மேல்நிலைப்பள்ளி லெட்சுமிபுரம், நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேனி, TMHNU மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முத்துத்தேவன்பட்டி மற்றும் தேனி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட சமூகநீதி விடுதி மாணவிகள் என 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பி.சினேஹாப்ரியா இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி தமிழரசி, பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத்பீடன், இ.ஆ.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கலைக்கதிரவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) திரு.பஞ்சாகேசன், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி சாந்தாமணி,தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி நிர்மலா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) திருமதி கவிதா, முதன்மைக் கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன், உதவி இயக்குநர்கள் திரு. திரு.வில்லியம் ஜேசுதாஸ் (பேரூராட்சிகள்), திருமதி உம்முல் ஜாமியா (ஊராட்சிகள்), திரு.அப்பாஸ் (நில அளவை), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி காமாட்சி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யதுமுகமது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ரேவதி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !