| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

சிறந்த காவலர்களுக்கு...! காந்தியடிகள் காவலர் பதக்கம்...! குவியும் பாராட்டுக்கள்...!

by Vignesh Perumal on | 2026-01-26 01:19 PM

Share:


சிறந்த காவலர்களுக்கு...! காந்தியடிகள் காவலர் பதக்கம்...! குவியும் பாராட்டுக்கள்...!

77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளிலும் சிறப்பாகச் செயல்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்குச் சிறப்பு விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாடு, குற்றவாளிகளைக் கண்டறிதல், வழக்குகளைக் கையாளுதல் மற்றும் பொதுமக்களுடனான அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த காவல் நிலையங்களுக்கு முதல்வர் கேடயங்களை வழங்கினார்:

முதலிடம் மதுரை மாநகரம் (சிறந்த செயல்பாட்டிற்காகத் தமிழகத்தின் முதன்மை காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது).

இரண்டாம் இடம் திருப்பூர் மாநகரம் மூன்றாம் இடம் கோயம்புத்தூர் மாவட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பில் தன்னிகரற்ற சேவை புரிந்ததற்காக, 5 காவல் அதிகாரிகளுக்கு "காந்தியடிகள் காவலர் பதக்கம்" வழங்கப்பட்டது. இந்தப் பதக்கத்துடன் பரிசுத் தொகையாக தலா ரூ. 40,000/- வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்கள், ஆய்வாளர் நடராஜன் விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு, உதவி ஆய்வாளர் சத்யாநந்தன் ஆரோவில் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம், உதவி ஆய்வாளர் மணிகண்டன் சின்னசேலம் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உதவி ஆய்வாளர் நடராஜன் புத்தூர் காவல் நிலையம், கடலூர் மாவட்டம், தலைமை காவலர் கண்ணன் மத்திய நுண்ணறிவுப் பிரிவு, சேலம் மாவட்டம் ஆகியோர் பெற்றுள்ளனர்.

குடியரசு தின விழாவில் வழங்கப்படும் இந்த விருதுகள், காவல்துறையினரின் அர்ப்பணிப்பைக் கௌரவிப்பதோடு, மற்ற அதிகாரிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைகின்றன. குறிப்பாக, மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் சிறப்பாகச் செயல்படுபவர்களை ஊக்குவிக்கக் காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விருது பெற்றவர்களைப் பாராட்டினர்.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment