| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

10,000க்கும் மேற்பட்டோர்...! முதல்வர் முன்னிலையில்...! திமுகவில் ஐக்கியம்...!

by Vignesh Perumal on | 2026-01-26 12:40 PM

Share:


10,000க்கும் மேற்பட்டோர்...! முதல்வர் முன்னிலையில்...! திமுகவில் ஐக்கியம்...!

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தஞ்சை செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட அரசியல் பொதுக்கூட்டத்தில், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தங்களை முறைப்படி திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகி, தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டுத் தாய் கழகமான திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த இணைப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்களான முன்னாள் நகராட்சித் தலைவர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் முக்கிய அதிமுக முகங்கள் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

தஞ்சாவூர் மட்டுமின்றி திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

புதிய உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "டெல்டா மண்டலம் எப்போதும் திராவிட இயக்கத்தின் கோட்டை. இன்று இணைந்துள்ள 10,000 உடன்பிறப்புகளும் இந்த அரணுக்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது வெறும் அரசியல் சேர்க்கை அல்ல; திராவிட மாடல் ஆட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குச் சான்று. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு இதுவே அச்சாரமாக அமையும்."

தஞ்சாவூர் அரசியலில் 'சோழ மண்டலத் தளபதி' என அழைக்கப்பட்ட வைத்திலிங்கம், அதிமுகவின் அசைக்க முடியாத தூணாகக் கருதப்பட்டவர். அவர் தற்போது 10,000 ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்திருப்பது, குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரு தரப்பு அதிமுகவினருக்கும் டெல்டா பகுதியில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

2026 தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட எதிர்க்கட்சிகள் வெற்றி பெறக் கூடாது என்ற வியூகத்துடன் திமுக தலைமை செயல்பட்டு வருகிறது. வைத்திலிங்கத்தின் வருகை, அந்தப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமூக வாக்குகளையும், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியையும் திமுக பக்கம் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.











நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment