| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

திண்டுக்கல்லில் பரபரப்பு..! பஸ் டிரைவரைத் தாக்கிய...! 3 பேர் கைது...!

by Vignesh Perumal on | 2026-01-25 07:58 PM

Share:


திண்டுக்கல்லில் பரபரப்பு..! பஸ் டிரைவரைத் தாக்கிய...! 3 பேர் கைது...!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய வழக்கில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த மூன்று வாலிபர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல்லில் இருந்து பழனிக்குச் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராகப் பணிபுரிபவர் பஷீர் அகமது (29). இவர் திண்டுக்கல் பேகம்பூர், அசனாத்புரம் பகுதியைச் சேர்ந்தவர்.இன்று வழக்கம் போலத் தனது பேருந்தை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த திருப்பத்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (34), பிரசாந்த் (33) மற்றும் முத்துப்பாண்டி (34) ஆகிய மூவரும் பழனி செல்வதற்காக அந்தப் பேருந்தில் ஏற முயன்றுள்ளனர்.அப்போது ஓட்டுநர் பஷீர் அகமது, "இந்தப் பேருந்து இப்போது பழனிக்குச் செல்லாது, பணிமனைக்கு செல்கிறது" என்று கூறியுள்ளார். இதில் அந்த இளைஞர்களுக்கும் ஓட்டுநருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த மூன்று இளைஞர்களும் ஓட்டுநர் பஷீர் அகமதுவைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.இந்தத் தாக்குதலில் பஷீர் அகமதுவுக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தக் காயங்களுடன் கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் நடந்த இந்த மோதல் குறித்துத் தகவல் அறிந்ததும், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்கிருந்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட வெங்கடேஷ், பிரசாந்த் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய மூவரையும் போலீசார் சுற்றி வளைத்துப்பிடித்தனர்.அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரையும் முறைப்படி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொது இடத்தில் அரசு அல்லது தனியார் ஊழியர்களைத் தாக்குவது சட்டப்படி குற்றம் எனவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment