by Vignesh Perumal on | 2025-03-16 01:51 PM
திருச்சிராப்பள்ளி மாவட்டம் பார்வையற்றோருக்கான மகளிர் பாடசாலையில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ராஜேஸ்வரியின் இறப்பில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளதால் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தி முறையான தீர்ப்பு வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு போதுமான நிவாரண வழங்கிட வேண்டும் என்றும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூபாய் 1500 உதவித் தொகையை 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் தகுதிக்கு ஏற்ப, சட்ட விதிமுறைகளின் படி அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என முக்கியத்துவம் வாய்ந்த 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 17.03.2025 (திங்கட்கிழமை ) காலை 11 மணி அளவில், கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சென்னை மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கணக்கில் திரண்டு காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, இந்தப் போராட்ட அறிவிப்பை தேசிய பார்வையற்றோர் இணையம்(NFB) வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
குழந்தையை கடத்தியவருக்கு காலில் எலும்பு முறிவு....!!!
முப்படை வீரர் கொடி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தேனீ கலெக்டர்...!!!
பல்கலைக்கழக அளவிலான கைப்பந்து போட்டிகள் இரண்டாம் இடம் பெற்ற திரவியம் கல்லூரி மாணவர்கள் ...!!!
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!