| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Government Scheme

அமலாக்கத்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்...! அச்சத்தில் ஊழியர்கள்...!

by Vignesh Perumal on | 2025-03-16 01:30 PM

Share:


அமலாக்கத்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்...! அச்சத்தில் ஊழியர்கள்...!

ஆண்டு ஒன்றுக்கு சுமார் 44 ஆயிரம் கோடி வருமானத்தை அரசுக்கு ஏற்படுத்திக் கெடுக்கும் மதுபான அங்காடிகள் மூலம் பல கோடி ரூபாய் கலால் வரி செலுத்தாமல் கருப்பு பணமாக மாற்றப்படுகின்றன என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அதாவது, சுமார் 14 மதுபான ஆலைகளிலிருந்து மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை கொள்முதல் செய்து,  மதுபான ஆலைக்கு வழங்கப்படும், மதுபான ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும், மது பாட்டில்கள் அரசு டாஸ்மாக் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது.  இப்படி மதுபான ஆலையில் தயாரிக்கப்படும் மது பாட்டில்கள் அங்கு இருக்கும் அதிகாரிக்கு தெரியாமல் ஒரு பாட்டில் கூட  டாஸ்மாக் கடைகளுக்கு தவிர்த்து வேறு எங்கும் அனுப்பி வைக்க  முடியாது.

இச்சூழலில், சமீபத்தில் எஸ்என்ஜெ  உட்பட நான்கு மதுபான உற்பத்தி ஆலைகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில், மதுபான ஆலையிலிருந்து மாதம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் மது பாட்டில்களின் எண்ணிக்கையும், டாஸ்மாக் நிறுவனம் குறிப்பிட்ட அந்த ஆலையில் இருந்து எவ்வளவு மது பாட்டில்களை கொள்முதல் செய்துள்ளது என்ற இந்த இரண்டு எண்ணிக்கையும் தொடர்புப் படுத்தி பார்க்கும் பொழுது, மிகப்பெரிய அளவில் வித்தியாசத்தை அமலாத்துறை அதிகாரிகள் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.


குறிப்பாக, மதுபான ஆலைகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் மது பாட்டில்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது என்று கணக்கு இருக்கிறது. அவ்வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் வெறும் 50,000/- பாட்டில்கள் மட்டுமே கொள்முதல் செய்துள்ளோம் என்கின்ற கணக்கு இருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்து இருக்கும் நிலையில். மீதமுள்ள 50,000 பாட்டில்கள் எங்கே சென்றது.? அதில் விற்கப்பட்ட பணம் யாருடைய கஜானாவிற்கு சென்றது என்பதை தான் தற்பொழுது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும், மிகப்பெரிய அளவில் நடந்த ஊழலில் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்துள்ள நிலையில்,  அரசாங்கம் முத்திரை பதித்து எப்படி போலியாக மது பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்கப்பட்டது. இருப்பினும், டாஸ்மாக் பாட்டில்களில் இருக்கும் ஹலால் ஸ்டிக்கர் கணக்கில் வரப்படாத பாட்டில்கள் மீதும் ஒட்டப்பட்டு விற்பனை செய்துள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு வந்தது.

மேலும், டாஸ்மாக் கடைகளில் கணக்கில் வரப்படாத பெரும்பாலான பாட்டில்கள் டாஸ்மாக் கடைகள் மூலமும்,  மனமகில் மன்ற மூலமும்,  எஃப் எல் 3 மூலமும் விற்பனை செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் குறிப்பாக டாஸ்மாக் கடை 10 மணிக்கு அடைத்து விட்டால்,  அதற்கு மேல் கள்ளத்தனமாக விற்கப்படும் பாட்டில்கள் அனைத்துமே இதுபோன்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு கணக்கில் காட்டப்படாத பாட்டில்கள் தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment