by Satheesh on | 2025-03-15 06:59 PM
தேனி: பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எண்ட புளி ஊராட்சி A. காமாட்சிபுரத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் பல லட்ச ரூபாயில் மதிப்பீட்டில் கட்டப்பட்டு நீண்ட நாட்களாக பயன்பாட்டுக்கு வராமல் சிதிலமடைந்தும், முட்புதர்கள் மண்டி கிடக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி. ஒப்பந்ததாரர், தரமற்ற நிலையில், முறையாக பணிகளை செய்யவில்லை என்றும், பஞ்சாயத்து தலைவரும், ஊராட்சி ஒன்றிய தலைவரும் என்ன காரணத்தினாலேயோ எதனையும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும், அதை நடைமுறைக்கு கொண்டு வர அதிகாரிகள் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. மேலும், கிராமசபா கூட்டத்தில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தில் சோத்துப்பாறை அணையில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். உடனடியாக, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பொது மக்களின் பயன்பாட்டுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.