| | | | | | | | | | | | | | | | | | |
சினிமா General

ஜனநாயகன் படத்திற்கு அதிரடி உத்தரவு...! உயர்நீதிமன்றம் கண்டனம்..! உடனே மேல்முறையீடு..!

by Vignesh Perumal on | 2026-01-09 11:48 AM

Share:


ஜனநாயகன் படத்திற்கு அதிரடி உத்தரவு...! உயர்நீதிமன்றம் கண்டனம்..! உடனே மேல்முறையீடு..!

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் நீங்கி, படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தைப் பார்த்த தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளை விமர்சித்த நீதிபதி, ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை, புகார்களின் அடிப்படையில் மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையை நீதிபதி ரத்து செய்தார்.

"ஜனநாயகன் படத்துக்கு எதிராக வரும் இது போன்ற புகார்கள் ஆபத்தானவை. வெளியீட்டு நேரத்தில் வரும் ஆதாரமற்ற புகார்களின் அடிப்படையில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கத் தாமதிக்கும் போக்கை ஒருபோதும் ஊக்கப்படுத்த முடியாது" என்று நீதிபதி கடுமையாகக் குறிப்பிட்டார்.

படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க வேண்டும் எனத் தணிக்கை வாரியத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது.

தனி நீதிபதியின் உத்தரவு தணிக்கை வாரியத்தின் சட்ட விதிகளுக்கு முரணாக இருப்பதாக தணிக்கை வாரியத் தரப்பில் வாதிடப்பட்டது.

தணிக்கை வாரியத்தின் இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இதனை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளது.

படம் வெளியாக இன்னும் மிகக்குறைந்த நாட்களே உள்ள நிலையில், தணிக்கை வாரியத்தின் இந்த மேல்முறையீடு படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை நீதிபதி அமர்வின் தீர்ப்பைப் பொறுத்தே படத்தின் வெளியீடு உறுதியாகும் என்பதால், கோலிவுட் வட்டாரமே இன்று நீதிமன்றத்தின் பக்கமே திரும்பியுள்ளது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment