by Vignesh Perumal on | 2026-01-06 04:37 PM
நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு (CBFC) தாமதம் செய்வதாகக் கூறி, படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
"கடந்த டிசம்பர் 19-ம் தேதி படத்தை ஆய்வு செய்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள், சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தினர். அவர்கள் கூறிய அனைத்து மாற்றங்களையும் செய்து, மீண்டும் படத்தை அனுப்பி வைத்தோம்.
படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் பாதிக்கப்படுகின்றன."
தணிக்கைக் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இப்படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். இதன் காரணமாகவே சான்றிதழ் வழங்குவதில் கூடுதல் ஆய்வு தேவைப்படுவதாகக் குறிப்பிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
படத்தில் மத உணர்வைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படும் புகார்கள் எவை? அவை குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தணிக்கைக் குழுவுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.
தணிக்கைக் குழுவின் விளக்கத்தைப் பொறுத்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்தனர்.
திட்டமிட்டபடி இன்னும் 3 நாட்களில் 'ஜனநாயகன்' வெளியாக வேண்டுமானால், நாளைக்குள் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பது அவசியமாகும். இதனால் நீதிமன்றம் நாளை வழங்கப்போகும் தீர்ப்பை விஜய் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா..!! கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்....!!
உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்..!!
ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ் அதிரடி பேட்டி...!
அமைச்சர் ஐ. பெரியசாமி..! அமலாக்கத்துறை...! ரத்து செய்ய மறுப்பு..!
விதி மீறும் வாகனங்கள் - கன்னியாகுமரி எஸ்.பி கடும் எச்சரிக்கை !