| | | | | | | | | | | | | | | | | | |
சினிமா General

மீண்டும் இணையும் ஜாம்பவான்கள்...! 'தலைவர் 173' மெகா அப்டேட்...!

by Vignesh Perumal on | 2026-01-03 04:24 PM

Share:


மீண்டும் இணையும் ஜாம்பவான்கள்...! 'தலைவர் 173' மெகா அப்டேட்...!

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு துருவங்களும் ஒரு படத்தில் (தயாரிப்பாளர் - நடிகர் என்ற முறையில்) இணைந்திருப்பது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

முதலில் இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களாலும், திரைக்கதையில் ஏற்பட்ட மாற்றங்களாலும் அவர் இப்படத்திலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், இன்று 'டான்' பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குனராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் ஆர். மகேந்திரன். இத்திரைப்படத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்றார். இசை ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார். 'பேட்ட', 'தர்பார்', 'ஜெயிலர்', 'வேட்டையன்', 'கூலி' படங்களைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் அனிருத் இணைகிறார்.

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில்" Every HERO has a FAMILY" (ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு குடும்பம் உண்டு) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது ஒரு சென்டிமென்ட் கலந்த ஆக்சன் குடும்பத் திரைப்படமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

இப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு, 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சிறு வயதில் தலைவரைச் சந்திக்க ஆசைப்பட்ட ஒரு சிறுவனின் கனவு, இன்று அவரை இயக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. கனவுகள் நிஜமாகும்!" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் 'தலைவர் 173' படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment