| | | | | | | | | | | | | | | | | | |
வணிகம் வணிகம்

முதல் நாளிலே அதிரடி உயர்வு....! வியாபாரிகளுக்கு எதிர்பாராத அதிர்ச்சி...!

by Vignesh Perumal on | 2026-01-01 09:10 AM

Share:


முதல் நாளிலே அதிரடி உயர்வு....! வியாபாரிகளுக்கு எதிர்பாராத அதிர்ச்சி...!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இறக்குமதி செலவினங்களின் அடிப்படையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில், 2026 ஜனவரி 1 முதல் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹110 உயர்ந்துள்ளது.குறிப்பாக, நேற்றைய விலை ₹1,739.50 இன்றைய விலை (ஜனவரி 1, 2026) ₹1,849.50 விற்பனை செய்யப்படுகிறது.வணிக சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்தாலும், வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் அதன் விலை தொடர்ந்து ₹868.50 ஆக நீடிக்கிறது. இது இல்லத்தரசிகளுக்கு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது.கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வணிக சிலிண்டர் விலை ஓரளவு குறைந்திருந்தது (நவம்பரில் ₹4.50 மற்றும் டிசம்பரில் ₹10.50 குறைந்தது). இந்த நிலையில், புத்தாண்டு தொடக்கத்திலேயே ₹110 உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை (LPG CP) டிசம்பரில் இருந்த 490-லிருந்து ஜனவரியில் 522.5 ஆக அதிகரித்துள்ளது. இதுவே இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் பேக்கரிகளின் நடத்துநர்கள் கூடுதல் செலவினத்தைச் சந்திக்க நேரிடும். இது மறைமுகமாக உணவுகளின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கலாம்.



நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment