by admin on | 2025-12-31 02:24 PM
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) -லிட், விழுப்புரம்.க.எண். 1003 /தொழில் நுட்பம் கூட் / த.நா.அ.போ.க (விழு)
பொருள்:- தொழில் நுட்பம் (கூட்டாண்மை) - பேருந்து இயக்கத்தின் போது -Cellphone, Bluetooth, Headset வைத்திருக்கக் கூடாது - தவறும்பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக.நமது போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர்கள் பேருந்து இயக்கத்தின் போது கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்த்திடும் பொருட்டு, ஓட்டுநர்கள் Cellphone, Bluetooth & Headset சாதனங்களை கண்டிப்பாக வைத்திருத்தல் கூடாது என .ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டிருந்தும், சில ஓட்டுநர்கள் இக்கருவிகளை பேருந்து இயக்கும் போது பயன்படுத்துவது கண்டறியப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சமீப காலமாக நமது போக்குவரத்துக் கழகத்தில் விபத்துக்கள் அதிகம் ஏற்படும் சூழ்நிலையில் ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் போது1. Cellphone, Bluetooth & Headsetகூடாது, அவற்றை நடத்துநரிடம் ஒப்படைத்திட வேண்டும்,2. செல்போனில் ஏதேனும் அவசர அழைப்புகள் வந்தால் அவற்றை அடுத்து வரும் பேருந்து நிலையத்தில் நடத்துநர் மூலம் கேட்டறிய வேண்டும்.3. Radio, Tap Recorderதவறும்பட்சத்தில் ஒட்டுநர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், மேற்கண்ட உத்திரவினை பரிசோதகர்கள் மற்றும் நேரக்காப்பாளர்கள் ஓட்டுநர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும், அவ்வாறு குறைபாடு கண்டறியப்பட்டால் புகார் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.மேலாண் இயக்கு நீருக்காக.பெறுதல்அனைத்து கிளை மேலாளர்கள்உதவி /துணை மேலாளர் (தொ.நு /வணிகம் / இயக்கம்)- அனைத்து மண்டலம்,நகல்உதவி /துணை மேலாளர் (தொ.நு/வணிகம் / இயக்கம்/திட்டம்) கூட்டாண்மை, விழுப்புரம்பொது மேலாளர்கள் - அனைத்து மண்டலம், பொது மேலாளர் (தொ.நு)- கூட்டாண்மை, விழுப்புரம்.நே.உ (மே.இ). விழுப்புரம்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
கொடைக்கானலில் வாகனங்கள் நுழைய 12 மணி நேரம் தடை...!
பள்ளிவாசலில் முறைகேடு - ஊழியர் தற்கொலை - போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை - நாகர்கோயிலில் பரபரப்பு. !
புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம் - போலீஸ் அதிரடி ;
செல்போனில் பேசினால்..??? அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மீது நடவடிக்கை...????
ஐ ஏ எஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு :