| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

ஐ ஏ எஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு :

by satheesh on | 2025-12-31 01:51 PM

Share:


ஐ ஏ எஸ் அதிகாரிகள் மாற்றம்  - தமிழக அரசு உத்தரவு :

 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்  ;கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராகவும், நில நிர்வாகம் ஆணையர் பழனிசாமி, கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும்,போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் கஜலட்சுமி, நில நிர்வாகம் ஆணையராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கிரண் குராலா, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராகவும், அறிவியல் நகரம் துணைத் தலைவர் தேவ் ராஜ் தேவ், தமிழ்நாடு உப்பு நிறுவன முதன்மை செயலாளராகவும், வரலாற்று ஆராய்ச்சி, ஆவணக் காப்பக ஆணையர் ஹர் சஹாய் மீனா, அறிவியல் நகர துணைத் தலைவராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.நீர்வளத்துறை சிறப்பு செயலாளர் மலர்விழி, வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவணக்காப்பக ஆணையராகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபால சுந்தர ராஜ், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித்துறைத் தலைவர், இயக்குநராகவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு துணைச் செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment