by satheesh on | 2025-12-31 01:41 PM
சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், தெற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, பதவி உயர்வு பெற்று ஆவடி போலீஸ் கமிஷனராகவும், மும்பை, சிபிஐயில் ஐஜியாக உள்ள தீபக் எம்.தோமர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவிலும், மேற்கு மண்டல ஐஜியாக இருந்த செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று, டிஜிபி அலுவலக தலைமையிட கூடுதல் டிஜிபியாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த அனிசா உசைன், பதவி உயர்வு பெற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், காவல்துறை நவீனமயமாக்கல் ஐஜியாக இருந்த நஜ்மல் ஹோடா பதவி உயர்வு பெற்று, கமாண்டோ படை ஏடிஜிபியாகவும், தலைமையிட ஐஜியாக இருந்த மகேந்திர குமார் ரத்தோடு, போலீஸ் நலன் ஏடிஜிபியாகவும், ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த ஏடிஜிபி சங்கர், சிறைத்துறை ஏடிஜிபியாகவும், போதைப்பொருள் அமலாகப்பிரிவு சிஐடி ஏடிஜிபியாக இருந்த அமல்ராஜ், தாம்பரம் போலீஸ் கமிஷனராகவும், சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், தாம்பரம் போலீஸ் கமிஷனராக இருந்த அபின்தினேஷ் முடக், போதைப்பொருள் மற்றும் அமலாகப்பிரிவு சிஐடி ஏடிஜிபியாகவும், கமாண்டோ படை ஏடிஜிபியாக இருந்த தினகரன், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏடிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் டிஐஜியாக உள்ள ரம்யா பாரதி, பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் ஐஜியாகவும், மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி பொன்னி, அதே பிரிவில் ஐஜியாகவும், வட சென்னை மாநகர போக்குவரத்து இணை கமிஷனர் சோனல் சந்திரா, குற்ற ஆவணக்காப்பக ஐஜியாகவும், ஒன்றிய அரசில் உளவுத்துறை டிஐஜியாக உள்ள ஜார்ஜி ஜார்ஜ், அதே பிரிவில் ஐஜியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், சிபிஐ எஸ்பியாக(குஜராத்) இருந்த கலைச்செல்வன், அதே பிரிவிலும் டிஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை குடியுரிமைப் பிரிவு எஸ்பி அருண் சக்திக்குமார், திருவனந்தபுரம் குடியுரிமைப் பிரிவு எஸ்பி அரவிந்த் மேனன் ஆகியோர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் பணியாற்றுகின்றனர். ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்பி செஷாங் சாய், பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் டிஐஜியாகவும், சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பிதேஸ்முக் சேகர் சஞ்சய், பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் டிஐஜியாகவும், மத்திய அரசுப் பணியில் உள்ள தீபா கனிங்கர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவிலும், ராஜஸ்தானில் அயல்பணியாக சென்றுள்ள ஓம் பிரகாஷ் மீனா, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவிலும், ஆவடி பட்டாலியன் எஸ்பியாக உள்ள மணிவண்ணன், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, நெல்லை நகர போலீஸ் கமிஷனராகவும், தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பி அருளரசு, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் டிஐஜியாகவும், ஆவடி நிர்வாகம் மற்றும் தலைமையிட துணை கமிஷனர் மகேஸ்வரன், சென்னை தலைமையிட இணை கமிஷனராகவும், விழுப்புரம் எஸ்பி சரவணன், திருநெல்வேலி டிஐஜியாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி சாமிநாதன், திண்டுக்கல் டிஐஜியாகவும், சென்னை மனித உரிமை ஆணைய எஸ்பி ஜெயலட்சுமி, தாம்பரம் இணை கமிஷனராகவும், சிலை தடுப்புப் பிரிவு எஸ்பி சிவக்குமார், ஆவடி இணை கமிஷனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.ராமநாதபுரம் டிஐஜி மூர்த்தி, சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், காஞ்சிபுரம் டிஐஜி தேவராணி, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், நெல்லை கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, சேலம் சரக டிஐஜியாகவும், அமலாக்கப்பிரிவு ஐஜி கபில்குமார் சரத்கர், தாம்பரம் தலைமையிடம், போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும், தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் கண்ணன், கோவை நகர கமிஷனராகவும், போலீஸ் அகாடமி ஐஜியாக இருந்த தேன்மொழி, போலீஸ் விரிவாக்கப் பிரிவுக்கும், மத்திய மண்டல ஐஜி நிர்மல்குமார் ஜோஷி, சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனராகவும், நிர்வாகப் பிரிவு ஐஜி பாலகிருஷ்ணன், மத்திய மண்டல ஐஜியாகவும், தாம்பரம் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு ஐஜியாகவும், சென்னை நிர்வாகப் பிரிவு கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, தென் மண்டல ஐஜியாகவும், போலீஸ் விரிவாக்கப் பிரிவு ஐஜி நரேந்திரன் நாயர், தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராகவும், கோவை கமிஷனர் சரவண சுந்தரம், மேற்கு மண்டல ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.பிகள் மாற்றம் ; பெரம்பலூர் எஸ்பி ஆதர்ஸ் பச்சோரி, சென்னை சைபர் கிரைம் எஸ்பியாகவும், செங்கல்பட்டு எஸ்பி சாய் பிரனீத், விழுப்புரம் எஸ்பியாகவும், நாகப்பட்டினம் எஸ்பி செல்வக்குமார், வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கத்துறை எஸ்பியாகவும், தாம்பரம் தலைமையிட துணை கமிஷனர் செந்தில்குமார், ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்பி உமையாள், போலீஸ் அகாடமி எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த டாக்டர் டி.செந்தில்குமார், திருச்சி துணை கமிஷனராகவும், திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பிரசன்னகுமார், திருநெல்வேலி எஸ்பியாகவும், திருச்சி வடக்கு துணை கமிஷனர் சிபின், செங்கல்பட்டு எஸ்பியாகவும், போலீஸ் நலன் பிரிவு எஸ்பி பாலகிருஷ்ணன், நாகப்பட்டினம் எஸ்பியாகவும், மதுரை மதுவிலக்கு அமலாக்கத்துறை எஸ்பி சந்திர சேகரன், சிலை தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும், மதுரை நகர துணை கமிஷனர் அனிதா, பெரம்பலூர் எஸ்பியாகவும், கீழ்பாக்கம் துணை கமிஷனர் ஜெரினா பேகம், காவலர் நலன் பிரிவு எஸ்பியாகவும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனர் கீதா, கீழ்பாக்கம் துணை கமிஷனராகவும், கோவை சிவில் சப்ளை சிஐடி எஸ்பி பாலாஜி சரவணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாகவும், தென்காசி எஸ்பி அரவிந்த், கள்ளக்குறிச்சி எஸ்பியாகவும், அங்கு எஸ்பியாக இருந்த மாதவன், தென்காசி எஸ்பியாகவும், திருநெல்வேலி எஸ்பி சிலம்பரசன், தூத்துக்குடி எஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல, தூத்துக்குடி நகர ஏஎஸ்பியாக இருந்த மதன், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர துணை கமிஷனராகவும், அருப்புக்கோட்டை ஏஎஸ்பியாக இருந்து மதிவாணன், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று மதுரை வடக்கு துணை கமிஷனராகவும், தமிழ்நாடு சிறப்பு கமாண்டோ பிரிவு 14வது பட்டாலியன் (பழநி) எஸ்பியாக இருந்த பாண்டியராஜன், தமிழ்நாடு சிறப்பு கமாண்டோ பிரிவு 24வது பட்டாலியனுக்கும் (ஆவடி), சென்னை காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பியாக இருந்த மகேஸ்வரி, தமிழ்நாடு காமண்டோ பிரிவு எஸ்.பியாகவும், சென்னை அடையார் துணை கமிஷனராக இருந்த பொன் கார்த்திக் குமார், பள்ளிக்கரணை துணை கமிஷனராகவும், பள்ளிக்கரணை துணை கமிஷனராக இருந்த கார்த்திகேயன், அடையாறு துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொடைக்கானலில் வாகனங்கள் நுழைய 12 மணி நேரம் தடை...!
பள்ளிவாசலில் முறைகேடு - ஊழியர் தற்கொலை - போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை - நாகர்கோயிலில் பரபரப்பு. !
புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம் - போலீஸ் அதிரடி ;
செல்போனில் பேசினால்..??? அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மீது நடவடிக்கை...????
ஐ ஏ எஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு :