| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

70 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு...! புதிய டிஜிபி-க்கள் நியமனம்...!

by Vignesh Perumal on | 2025-12-31 12:20 PM

Share:


70 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு...! புதிய டிஜிபி-க்கள் நியமனம்...!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில், 70 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பதவி உயர்வு செய்தும், பணியிட மாற்றம் செய்தும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த மாற்றங்கள் நாளை (ஜனவரி 1, 2026) முதல் நடைமுறைக்கு வருகின்றன.1995-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த 3 மூத்த அதிகாரிகள் கூடுதல் டிஜிபி (ADGP) அந்தஸ்திலிருந்து டிஜிபி (DGP) நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். டேவிட்சன் தேவாசீர்வாதம் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி, ஆயுதப்படை டிஜிபிசந்தீப் மிட்டல் சைபர் கிரைம் ஏடிஜிபி சைபர் கிரைம் டிஜிபி பால நாகதேவி பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி தமிழகத்தின் மிக முக்கியமான பதவியான சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி பொறுப்புக்கு, சிறைத்துறை ஏடிஜிபி-யாக இருந்த மகேஷ்வர் தயாள்‌நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய மற்றும் மாநிலப் பணியில் இருந்த 7 ஐஜி-க்கள் (IG) கூடுதல் டிஜிபி-க்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்:டி.எஸ். அன்பு சிபிசிஐடி ஏடிஜிபி-யாகப் பதவி உயர்வுடன் அதே பிரிவில் நீடிக்கிறார். பிரேம் ஆனந்த் சின்ஹா தென்மண்டல ஐஜி-யிலிருந்து ஏடிஜிபி-யாகப் பதவி உயர்த்தப்பட்டு ஆவடி காவல் ஆணையராக நியமனம். டி. செந்தில்குமார்: மேற்கு மண்டல ஐஜி-யிலிருந்து பதவி உயர்வு பெற்று டிஜிபி அலுவலகத் தலைமையிட ஏடிஜிபி-யாக நியமனம்.அனிஷா உசேன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி (புதிதாக உருவாக்கப்பட்ட பதவி).நஜ்மல் ஹோடா கமாண்டோ படை ஏடிஜிபி. மகேந்திர குமார் ரத்த காவலர் நல ஏடிஜிபி.தீபக் எம். தாமோர் மத்திய அரசுப் பணியில் ஏடிஜிபி-யாகப் பதவி உயர்வு.சென்னை புறநகர் ஆணையரகங்கள் மற்றும் முக்கிய மண்டலங்களுக்குப் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம் ஆணையர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி-யாக இருந்த ஏ. அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.கோவை ஆணையர் சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக இருந்த என். கண்ணன, கோவை மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.சிறைத்துறை ஆவடி ஆணையராக இருந்த சங்கர், சிறைத்துறை ஏடிஜிபி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மண்டல ஐஜி-க்கள் விஜயேந்திர எஸ். பிதரி தென்மண்டல ஐஜி (மதுரை).வி. பாலகிருஷ்ணனமத்திய மண்டல ஐஜி (திருச்சி). ஏ. சரவண சுந்தர்..மேற்கு மண்டல ஐஜி (கோவை). மேலும், 15 எஸ்பி-க்கள் (SP) டிஐஜி-க்களாகப் (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் சரக டிஐஜி-யாக ஜி. ஷேஷாங் சாய் மற்றும் ராமநாதபுரம் சரக டிஐஜி-யதேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment