| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Kanniyakumari

செல்பி பாயிண்ட் மூலம் கலெக்டர் மற்றும் எஸ்பி நூதன விழிப்புணர்வு..!

by Vignesh Perumal on | 2025-12-30 04:39 PM

Share:


செல்பி பாயிண்ட் மூலம் கலெக்டர் மற்றும் எஸ்பி நூதன விழிப்புணர்வு..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் விடுபடாமல் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரத்யேக 'செல்பி பாயிண்ட்' ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த இடத்தில், விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.இந்த விழிப்புணர்வு முயற்சியைத் தொடங்கி வைக்கும் விதமாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், இ.கா.ப., ஆகியோர் நேரில் வந்தனர். அவர்கள் இருவரும் அந்த செல்பி பாயிண்டில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.உயரதிகாரிகளே முன்வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது, அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அவர்கள் கூறுகையில், "மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தகுதியுள்ள வாக்காளர்களும் தங்களது பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். புதிதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் மற்றும் முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் இதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஜனநாயகக் கடமையை ஆற்ற முதற்படி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வதே" எனத் தெரிவித்தார்.முதல்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள 18 வயது இளைஞர்கள், ஆர்வத்துடன் பெயர் சேர்க்க முன்வர வேண்டும் என்பதற்காகவே இத்தகைய செல்பி பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஸ்டாலின் அவர்களும், நேர்மையான மற்றும் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு செல்பி எடுத்துத் தங்களது விழிப்புணர்வைப் பகிர்ந்து கொண்டனர்.

நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment