| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

வழக்கறிஞர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்...! மாஸ்டர் பிளான்..!

by Vignesh Perumal on | 2025-12-30 02:50 PM

Share:


வழக்கறிஞர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்...! மாஸ்டர் பிளான்..!

உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நீதிமன்ற நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் வழக்கறிஞர்களுக்குப் புதிய நிபந்தனைகளை விதித்து உச்ச நீதிமன்றப் பதிவாளர் இன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.புதிய நடைமுறையின்படி, வழக்கறிஞர்கள் தாங்கள் வாதாடுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.வழக்கறிஞர்கள் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பதை விசாரணை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மற்ற வழக்குகளுக்கான நேரத்தைத் தேவையற்ற முறையில் ஆக்கிரமிப்பதைத் தவிர்க்க உதவும்.வழக்கு விசாரணையின் நேரத்தைச் மிச்சப்படுத்த மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தின் சுருக்கத்தை 5 பக்கங்களுக்கு மிகாமல் தயார் செய்ய வேண்டும்.இந்தச் சுருக்கத்தை வழக்கு விசாரணைக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.இதன் மூலம் நீதிபதிகள் வழக்கின் சாராம்சத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும், விசாரணையைத் தடையின்றி விரைவாக நடத்தவும் வாய்ப்பு ஏற்படும்.உச்ச நீதிமன்றத்தில் தற்போது சுமார் 91,677 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், சாதாரண மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கவும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.நீண்ட நேரம் வாதங்களை முன்வைப்பது மற்றும் அடிக்கடி ஒத்திவைப்புகளைக் கேட்பது போன்ற காரணங்களால் வழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்குகின்றன. இந்தப் புதிய சுற்றறிக்கை மூலம்: 'தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். நீதிமன்றத்தின் ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாக மாற்றப்படும். ஒரு நாளில் அதிகப்படியான வழக்குகளை விசாரணைக்கு எடுக்க முடியும்.இந்த அதிரடி மாற்றங்கள் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. வழக்கறிஞர்கள் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றப் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment