by admin on | 2025-12-30 02:38 PM
கோரப்படாத வாய்ப்புத் தொகை தீர்வு முகாம்...!!!
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (30.12.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில், வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை (Unclaimed Fund) தீர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, இந்திய அரசின் நிதி சேவைகள் துறையின் மூலம் தொடங்கப்பட்டுள்ள “உங்கள் பணம், உங்கள் உரிமை ” (Your Money, Your Rights) திட்டத்தின் ஒரு பகுதியாக, உரிமை கோரப்படாத வைப்புத் தொகை (Unclaimed Fund) தீர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது வங்கிகளில் உள்ள உரிமைகோரப்படாத வைப்புத்தொகைகளுக்கு (Unclaimed Fund) தீர்வு காணலாம். எனவே, வங்கிகள் / நிதி சார் நிறுவனங்களிலிருந்து சம்பந்தப்பட்ட வைப்புத் தொகையாளர்கள் (அல்லது) இறந்த வைப்புத் தொகையாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் (அல்லது) இறந்த வைப்புத் தொகையாளர்களின் பரிந்துரைக்கப்பட்டவர்கள் (Nominee) சரியான ஆதாரங்களை சமர்ப்பித்து உரிமைக் கோரப்படாத தொகையினை வட்டியுடன் திரும்பப்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 01.10.2025 முதல் தற்பொழுது வரை மொத்தம் ரூ.1.23 கோடி வைப்புத்தொகை உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பித்த 266 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகையினை பெறுவதற்கான விண்ணப்ப காலம் 2026 செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிந்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் வங்கிகளில் உரிமைக் கோரப்படாத ரூ.9,45,611/-வைப்புத்தொகை சம்பந்தப்பட்ட 8 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இம்முகாமில் முன்னோடி வங்கி மேலாளர் திரு.கார்த்திகேயன், மண்டல மேலாளர் திரு.சந்திரகுமார் மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். '
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337344
கொடைக்கானலில் வாகனங்கள் நுழைய 12 மணி நேரம் தடை...!
பள்ளிவாசலில் முறைகேடு - ஊழியர் தற்கொலை - போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை - நாகர்கோயிலில் பரபரப்பு. !
புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம் - போலீஸ் அதிரடி ;
செல்போனில் பேசினால்..??? அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மீது நடவடிக்கை...????
ஐ ஏ எஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு :