by admin on | 2025-12-30 01:03 PM
காக்கி சட்டை அணிவதில் பெருமை கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் பெருமையாக பேசினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் அமைப்பில் 09 ஆண்கள் மற்றும் 07 பெண்கள் என மொத்தம் 16, கடலோர ஊர் காவல் படைக்கு 15 ஆண்கள் என மொத்தம் 31 ஊர்க்காவல் படை ஆளிநர்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட 31 ஊர் காவல் படையினருக்கு கடந்த 03.11.2025 ஆம் தேதி முதல் 30.12.2025 தேதி வரை மொத்தம் 45 நாட்கள் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.R.ஸ்டாலின் IPS* அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்காவல் படை படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஊர்காவல் படையினருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சிறப்பாக பயிற்சி செய்த ஊர்க்காவல் படையினருக்கு பண வெகுமதி மற்றும் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன், ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி, வட்டார தளபதி டாக்டர். A.பிளாட்பின், துணை வட்டார தளபதி திருமதி.K.R.மைதிலி சுந்தரம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்..
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
கொடைக்கானலில் வாகனங்கள் நுழைய 12 மணி நேரம் தடை...!
பள்ளிவாசலில் முறைகேடு - ஊழியர் தற்கொலை - போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை - நாகர்கோயிலில் பரபரப்பு. !
புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம் - போலீஸ் அதிரடி ;
செல்போனில் பேசினால்..??? அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மீது நடவடிக்கை...????
ஐ ஏ எஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு :