| | | | | | | | | | | | | | | | | | |
TAMILNADU Tamilnadu

மான் இறக்கும் வரை வேடிக்கை பார்த்த வனத்துறை....????

by Muthukamatchi on | 2025-03-15 11:41 AM

Share:


மான் இறக்கும் வரை வேடிக்கை பார்த்த வனத்துறை....????

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு  வனச் சரகத்திற்கு உட்பட்ட தர்மராஜபுரம் கிராமத்தில், நேற்று (14/03/2025) மாலை 4:30 மணி அளவில் மான் ஒன்று  தெரு நாய் கடித்த நிலையில் தர்மராஜாபுரம் கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள ஒரு மாட்டு தொழுவத்தில் தஞ்சம் அடைந்தது.  அப்பொழுதே வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர் பொதுமக்கள் தகவல் கொடுக்கவும்தகவல் கொடுத்தனர்.அப்பொழுதே வனத்துறையினர்  மான் இருந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். ஆனால் இரவு 8:00 மணி வரை எந்த மான முதல் உதவியும் செய்யவில்லை. இரவு எட்டு மணிக்கு  மேல் மான் இறந்து விட்டதாக கூறி ((வனத்துறை வாகனம் கொண்டு வராமல்)) வருசநாட்டில் இருந்து ஒரு ஆட்டோவை வரவழைத்து அந்த மான் இறந்த பிறகு அதன் சடலத்தை எடுத்துச் சென்றனர்.  வனத்துறையின் அலட்சியப் போக்கால் மான் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.தெரு நாய் கடித்து காயமடைந்த மானை சிகிச்சை செய்யாமல் வேடிக்கை பார்த்த வனத்துறையினர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை  எடுத்த மாவட்ட வன அலுவலர் முன் வர வேண்டும்.

நிருபர் மீனாட்சி சுந்தரம் வருசநாடு -தேனி மாவட்டம்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment