by Muthukamatchi on | 2025-03-15 03:49 AM
அருள்மிகு ஸ்ரீ கல்யாண காமாட்சி உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்* கோட்டை கோயில் - தர்மபுரிஇறைவன் :மல்லிகார்ஜுனேஸ்வரர்மாவட்டம்:தர்மபுரி , தமிழ்நாடுதர்மபுரியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் இந்த கோயில் ஒரு முதன்மையான இடத்தை பெறுகிறது . கோட்டை கோயில் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் கோயிலாகும் .எட்டாம் நூற்றாண்டில் நுளம்பர் என்ற குறுநில மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும் . இக்கோயில் ஒரு தேவார வைப்பு தலமாகும் .கோயிலுக்கு சிறிய நுழைவு வாயில் உள்ளது அதன் வழியே உள்ளே சென்றால் கொடிமரம் மற்றும் நந்தி பெருமானை தரிசனம் செய்துவிட்டு நாம் உள்ளே நுழைந்தால் வீரபத்திரரை நாம் தரிசிக்கலாம் . பின்பு நாம் உள்ளே நுழைந்தால் இறைவன் உள்ள அர்த்த மண்டபத்தை அடையலாம் . அர்த்த மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்ட இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை பல டன் இருக்கும் என்று கூறுகிறார்கள். இதனால் இவை ‘தொங்கும் தூண்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இது நம் தமிழர்களின் கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்து சொல்வதுபோல் உள்ளது .
Posted on 2025-03-15 01:29 PM
Posted on 2025-03-15 08:53 AM