| | | | | | | | | | | | | | | | | | |
CRIME Crime

பிரசவத்திற்கு வந்த பெண்ணிடம் திருடிய கணவன் மனைவி கைது.....!!?

by Muthukamatchi on | 2025-03-14 08:16 PM

Share:


பிரசவத்திற்கு வந்த பெண்ணிடம் திருடிய கணவன் மனைவி கைது.....!!?

சின்னாளபட்டியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் 4 பவுன் செயின், பணத்தை திருடிய வழக்கில் கணவன் - மனைவி  கைது* திண்டுக்கல், சின்னாளப்பட்டியில் தனியார் மருத்துவமனையில் நாகல்நகர் பகுதியை சேர்ந்த சர்மிளா என்ற பெண் கடந்த 7-ம் தேதி பிரசவத்திற்காக  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தினை தனியாக ஒரு அறையில் வைத்திருந்தனர்.இதனை தெரிந்து கொண்ட பெண் நகை பையை திருடி சென்றதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சின்னாளப்பட்டி  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக வளையப்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல், அவரது மனைவி தமிழ்ச்செல்வி  ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் திருடி சென்ற நகையினை மீட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட சர்மிளாவிடம் ஒப்படைத்தனர்.

படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment