by Muthukamatchi on | 2025-03-14 06:43 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதம் பறிமுதல் செய்த புகையிலைப் பொருட்கள் அழிப்புதிண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கையால் கடந்த 6 மாதம் தொடர்ச்சியாக திண்டுக்கல், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதித்து வைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 15 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் அதிகாரிகள் உத்தரவின் பேரில் திண்டுக்கல், பழனி ரோடு முருகபவனம் குப்பை கிடங்கில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையிலான குழுவினர் பத்தடி ஆழத்திற்கு மண் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பறிமுதல் செய்யப்பட்ட 15 டன் புகையிலை பொருட்களை கொட்டி அழித்தனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்