by Muthukamatchi on | 2025-03-14 02:51 PM
டாஸ்மாக் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்ல...? அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.டாஸ்மாக் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் தவறு நடந்ததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி நடப்பதாக அமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார். டாஸ்மாக் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை ஒன்றிய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு எதிராக ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை உள்நோக்கத்துடன் ஏவியுள்ளது. டெண்டரில் எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.