by admin on | 2025-02-10 12:14 PM
தயார் நிலையில் ஏரோ இந்தியா...
நாளை தொடங்கி நான்கு நாட்களுக்குநடக்க இருக்கும்ஏரோ இந்தியா2025 படு வேகமாகதயாராகி வருகிறது.
இணையத்தளம் முழுக்க ஓர் விஷயம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அது பலரையும் புருவம் உயரச்செய்த சமாச்சாரமாகவும் இருக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என முரண்டு பிடித்தஅமெரிக்க லாக்ஹீட் மார்ட்டின் தயாரிப்பு F35 விமானம் பெங்களூரு வந்து சேர்ந்து, பலரையும் ஆச்சரியப்படுத்திஇருக்கிறது.
நேற்று முன்தினமேரஷ்ய தயாரிப்பு சுகோய் சூ 57 வந்து சேர்ந்த நிலையில் சூ 75 விமானமும் வந்திருக்கிறது.இதுவொரு மாதிரி விமானரகமாகும்.
இவ்வாண்டு தொடக்கத்தில் சீனா தான் முதலில் ஏர் ஷோ நடத்தியது. அதில் தான் அவர்கள் சொன்னஆறாம் தலைமுறை விமானத்தை காட்சி படுத்தியிருந்தார்கள்.
இது கொஞ்சம் அதிரி புதிரியான விஷயம்.
பொதுவாக போர்விமானங்கக்கு அதிகசக்தி கொடுக்கும் இஞ்சின் கள் தான் அதன் உயிர் நாடி. தவிர அதிக எடையுள்ள அதாவது அதிகளவில் ஆயுதங்களை கொண்டு செல்லவேண்டிஇருக்கும்.போர் காலங்களில் அதற்கு தேவையும் இருக்கும்.
எரிபொருள் எடையும்.... கூடும்.இப்படி பலவிதமான முன்னேற்பாடுகள் இதற்கு தேவைப்படுகிறது.நம்இந்தியதயாரிப்பு தேஜாஸ், உலக அளவில் இலகு ரகபிரிவில் கில்லி. அதிக அளவிலான ஆயுதங்களையும் அதிக நேர பறத்தலையும் அது ஊர்ஜிதம் செய்திருக்கிறது.கிட்டத்தட்ட இது நான்காவது தலைமுறை விமானமாக இருக்கிறதுநாம் பிரான்ஸிடம் இருந்து வாங்கிய ரஃபேல் 4.5 ஆம் தலைமுறை இரட்டை இஞ்சின் பொறுத்தப்பட்ட விமான ரகமாகும்.
ஐந்தாம் தலைமுறை விமானத்தில் ஸ்டெல்த் பண்புகளை கொண்டு இருக்கிறது. இது ராடாரில் சிக்காது. அதேசமயம் எதிரி ரேடார் சிக்கல்களை குழப்பம் வல்லமையையும் கொண்டு இருக்கும்.இதில் அமெரிக்கா தான் முன்னணியில் இருந்தது.
அவர்கள் இதனை 1996 ஆம் ஆண்டே சாதித்திருக்கிறார்கள்இதனை... அதாவது இந்த ரக விமானங்ளை தயாரித்து கொடுத்தது தான் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம். இருபத்திஐந்து ஆண்டுகள் ஆன போதிலும் இதனைஅடித்து கொள்ள ஆளே இல்லைஎன்கிற ரீதியில் இயங்கி வருகிறார்கள்.
தற்சமயம் ஆறாம் தலைமுறை விமானத்தை களம் இறக்க நேரம் பார்த்து வருகிறார்கள்.
எல்லாம் சரி....
ஐந்தாம் தலைமுறை விமானங்களுக்கும் ஆறாம் தலைமுறை விமானங்களுக்கும் என்ன வித்தியாசம்...?? பெரியதாக ஒன்றும் இல்லை.தானியங்கி தான் பிரதானஅம்சம். தன்னிச்சையாக செயல்படக்கூடிய.... ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்குகளை குறி பார்க்க... தானாகவே தளம் திரும்பும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.அதன் பொருட்டே சீனர்களால் இதனைஅத்தனை எளிதில் சாதித்திருக்க முடியாது என மேற்கு உலக நாடுகள் தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார்கள்.
இங்கு மற்றோர் விஷயமும் கவனிக்க வேண்டும். அது போர் திறன். சண்டைசெய்த அனுபவம் இருக்க வேண்டும். அது சீனர்களுக்கு இல்லை.அப்படி என்றால் இந்தியாவிற்கு....?????
நம்மில்பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் நாமும் விமானப் படை விமானங்களில் போர்பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்று. அது தவறு. நாம்.... நம் வீரர்கள் முதல் உலகப் போரினாலேயே கலந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னமும் சரியாக சொல்வதென்றால் முதல் உலகப் போரினாலேயே விமானத்தை இயக்கிய பெருமை நமக்குஉண்டு. அந்நாளைய ராயல் ஏர் ஃபோர்ஸின் உயிர் நாடியே நம்மவர்கள் தான் என்கிற பெருமையை கொண்டவர்கள் நாம்.
இங்கிலாந்தின் ராயல் ஏர் ஃபோர்ஸின் ஒரு படையே நம்மவர்களை கொண்டுஅதிலும் குறிப்பாக நம் தமிழகத்தை சேர்ந்தவர்களைமாத்திரமே கொண்டு இயங்கியது என்பதுநம்மில் எத்தனைபேருக்கு தெரியும். இது நடந்தது 1916-17ஆண்டு காலகட்டத்தில் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.இன்று உள்ள விஷயங்களுக்கு வருவோம்.நாமும்.... நம் தரப்பிலும் விமானங்களை சுயமாக தயாரிக்க முனைப்புடன் செயல்பட்டு கொண்டு வருகிறோம். முதலில் 4.5 தலைமுறை விமானம் அதற்கு அடுத்ததாக 5.5 தலைமுறை விமானம் என்கிற இலக்கு நிர்ணயம் செய்து இயங்கி வருகிறோம். இதிலும் 90% பணிகள் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.அடுத்த ஆண்டு நம்முடைய விமானம் பறத்தல் சோதனைகளை மேற்கொள்ள உள்ளன.அதன் அச்சு அசல் மாதிரியை இந்த விமான கண்காட்சியில் வைக்க இருக்கிறார்கள்.எல்லாம் சரி.....
நம்முடைய ஆறாம் தலைமுறை விமானம்...???
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தயாராகி விடும் என்கிறார்கள்.
ஐயோ அத்தனை காலமா...???
என மலைப்பவர்களுக்கு, வரும் அந்த ஆறாம் தலைமுறை விமானம் ஆளில்லா விமானத்திற்கு ஆளில்லா விமானம் போலும், விமானியோடும் பறக்கும் திறன் கொண்டதாக.. அதேசமயம் ஆளில்லா இலகு ரக ட்ரோன்களையும் ஒருங்கிணைத்து பறக்கும் திறன் கொண்டதாக அது இருக்கும் என்கிறார்கள்.
இது உலகிற்கு புது தொழில்நுட்ப விந்தை.நம்முடைய ஐந்தாவது தலைமுறை விமான ரகமே இன்று உலகம் சொல்லும் ஆறாம் தலைமுறை விமான கோட்பாடுகளை கொண்டு இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்....ஸ்டெல்த் மற்றும் மனுவரிபிளிட்டியில் உச்சம் தொட்டு நிற்கும் விமானங்களாக நம் இந்திய தயாரிப்பு போர் விமானங்கள் இருக்கும் என அடித்து சொல்கிறார்கள். இந்த மனுவரிபிளிட்டியில் உச்சம் தொட்டது ரஷ்ய தயாரிப்பு விமானங்கள் தான்.
அதனையும் கைக் கொண்டு இந்தியா சாதிக்கும் என்கிறார்கள்.இந்த பண்பு எதனை குறிக்கிறது என்றால் அதி வேகத்தில் இயங்கும் விமானம் ஒன்று சட்டென்று சடுதியில் திசை திரும்பி பறக்கும் வல்லமையை சொல்லும் சங்கதி, தவிர மிக குறைந்த உயரத்தில் அசையாது நிற்கவும் செய்யும். இதனை சாதித்து ரஷ்யர்கள் தான். இன்றளவும் இவர்கள் தான் இதில் கில்லி.
கொஞ்சம் சிக்கலான சமாச்சாரம் இது. ஓர் விமானம் இயங்கும் சமயத்தில் தான் சமன்பாட்டின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
அதாவது இயங்கும் சமயத்தில் தான் அது நிலைப்படுத்தப்படும்.
அப்படி செய்ய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துணைக்கு வருகிறது. தானியங்கி வசதிகள் தேவைப்படுகிறது.
இதற்கு ஏராளமான தரவுகள் மற்றும் பயிற்சி பறத்தல்களின் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைப்பதில் தான் சாமர்த்தியம் தேவை.
அதனை நம்மவர்கள் அட்டகாசமாக செய்திருக்கிறார்கள். அதாவது சாதாரணமாக இருக்கும் சமயத்தில் ஒரு விமானம் அதிக நிலைத்தன்மை அற்றதாக இருக்கும் அதே விமானம் பறக்கும் சமயத்தில் உச்ச பட்ச நிலைப்பு தண்மையை அது அடையும் விதத்தில் தான் இதன் சூட்சுமமும் அடங்கி இருக்கிறது. இதனை சாதித்து விட்டோம் நாம்.
இங்கு மற்றோர் சமாச்சாரம் இருக்கிறது.... ஸ்டெல்த் தொழில்நுட்ப பண்புகளை ஓர் பெயிண்ட் கலவை கொண்டே பூர்த்தி செய்து அட்டகாசம் செய்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.
இது அத்தனையும்..... இந்த ஏரோ இந்தியா 2025 கண்காட்சியில் இடம் பெற இருக்கிறது.
யானையை கட்டி தீனி போடும் சமாச்சாரம் இந்த போர் விமானங்களின் தொழில்நுட்பம் மற்றும் அதன் தயாரிப்பு. இதற்கான அத்தனையும் கண்காட்சியில் இடம் பெற்று இருக்கும் என்கிறார்கள்.
வளரும் நம் இளம் தலைமுறையினருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
கட்டுரை உதவி ஸ்ரீராம் பெங்களூர்.