by admin on | 2025-02-08 10:14 PM
அநேகமாக இதனை இன்று அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் வெளியிடலாம்
தில்லி தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்க இருக்கிறார்கள்.
அர்விந்த் கேஜ்ரிவால் மீண்டும் தனது மாமியார் வீடு செல்ல அத்தனை ஏற்பாடுகளும் அவரே பூர்த்தி செய்து வைத்து இருக்கிறார்.
ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அத்தனை அழிச்சாட்டியங்களும் அநாயாசமாக செய்து வந்திருக்கிறார். கட்ட கடைசியாக பிரதமர், தலைநகருக்கு வரும் குடிநீரில் விஷம் வைத்து இருக்கிறார் என அடித்து விட்டு இருக்கிறார்.
களி திங்கும் காலம் அவருக்கு நெருங்கி இருக்கிறது.
அதுபோலவே தலைநகரை மீண்டும் ஆள பாஜகவுக்கு வாய்ப்புகள் பிராகசமாகி இருக்கிறது.சற்றேக்குறைய கால் நூற்றாண்டுக்கு பிறகு தலைநகரம், பிரதமரான நரேந்திர மோடி வசம் வர இருக்கிறது. இனி வளர்ச்சி திட்டங்களுக்கு மாத்திரமே கவனம் செலுத்தாமல் பாதுகாப்பு அம்சங்களுக்கும்.... அதன் எல்லையோர மாநிலங்களால பஞ்சாப் ஹரியானா போன்றவற்றை கவனித்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்......
இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் தான் பதில் சொல்ல வேண்டும்.
அடுத்ததாக பாரதப் பிரதமர் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அரசு முறை பிரயாணமாக அமெரிக்கா செல்ல இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த பயணத்திட்டம் அமைந்திருக்கிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து அகண்ட அமெரிக்கா என்கிற ரீதியிலான திட்டத்தை முன்மொழிந்து நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடித்து வருகிறார். போதாக்குறைக்கு மத்திய கிழக்கு நாடுகளை கதிகலங்க செய்து வருகிறார்.... காசா இனி அமெரிக்கா வசம் என்பது வரை....அவரது அதிரடிக்கு பஞ்சமே இல்லை.
ஆப்கானிஸ்தானில் ஜோபைடன் விட்டு வந்த ஆயுதங்கள் திரும்ப கேட்டதெல்லாம் நடந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தை துணைக்கு அழைத்து வான் தாக்குதல் எல்லாம் நடத்தியிருக்கிறார் அவர்.
இரண்டாம் முறையாக அவர்பதவிக்கு வந்ததும் சந்தித்த முதல் தலைவராக இஸ்ரேலிய பெஞ்சமின் நெதன்யாகு இருந்தார். அடுத்ததாக ஜோர்டான் என பல அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை இந்த பிப்ரவரி மாதத்திலேயே சந்திக்க போவதாக கடந்த ஜனவரி மாதம் 27 தேதி நடைபெற்ற இருவருக்குமான தொலைபேசி உரையாடலை தொடர்ந்து அவர் தான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
ஏப்ரல்மாதத்தில் தான் சந்திப்பதாகதிட்டம் இருந்தது.
ஆனால் பதவியேற்ற முதல் மாதமே நம் பாரதப் பிரதமரைசந்திக்கவிருப்பம் தெரிவித்து, அது ஏற்றுக் கொள்ளப்பட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக நம் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.கனடா வழியாக சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களில் முதல் இடத்தில்பஞ்சாப் மாநிலத்தை அடுத்துகுஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆனால் கைது நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு பஞ்சாப் மாநிலத்தவரை மாத்திரமே அதிரடியாக வெளியேறி வருவதாக புகார் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாக செலவு செய்து அமெரிக்க ராணுவ விமானத்தில் அவர்களை கைவிலங்கு போட்டு கொண்டு வந்து இறக்கி இருக்கிறது அமெரிக்கா.
போனவர்களில் பலர் சட்ட விரோதமாக ஐம்பது லட்சம் முதல் கோடி ரூபாய்செலவில் ஏஜென்சி மூலமாகசென்று இருக்கிறார்கள் என தற்போது தெரியவந்துள்ளது. இந்த தொகையை கொடுக்க முடியாதவர்கள் போதை லாகிரி வஸ்துக்களை கொண்டு சென்று கணக்கை நேர் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் அங்கு உள்ள புலனாய்வு குழு அதிகாரிகள்.
என்னமோ இந்தியர்களை மொத்தமாக அமெரிக்கா வெளியேற்றுகிறது என்கிற ரீதியிலான பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டும் வருகிறார்கள்.
ஆனால் ஓர் சாதாரணகணக்கு.,தலைக்கு ஐம்பது முதல் கோடி ரூபாய் செலவு செய்து அமெரிக்கா சென்றது எதற்காக.... அதிலும்குறிப்பாககுறைந்தது 18,000 பேர் வரை இந்த வகைப்பாட்டில் கீழ் வருகிறார்கள் என்றால்....., இவர்களிடம் இருந்து பெறப்பட்டபணம்யாருடைய கைகளுக்கு போனது....???? அவர்கள்அதனை எந்தெந்த வழிகளில் மடைமாற்றி இருக்கிறார்கள் என்பது வரை விரல்நுனியில் வைத்து இருக்கிறார்கள் அங்குஉள்ள அதிகாரிகள்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வர காத்துக்கொண்டுஇருந்தது போல் ஜுர வேகத்தில் காரியங்கள் நடக்கிறது அங்கு.
USAID அதிரடியாக நிறுத்தி விட்டு இனி இந்த அமைப்பின் கீழ் செலவிடப்பட்ட பணத்தை ஆராயபோவதாகஅறிவித்து அதிர்ச்சி அளித்திருக்கிறார்டொனால்ட்ட்ரம்ப். அத்தியாவசிய அவசியம் என்றால் இனி அதனை அமெரிக்கா வெளியுறவுத் துறைஅமைச்சகம் பார்த்து கொள்ளும் என கூறியிருப்பது தான் ஹை லைட். ஆக அமெரிக்க அரசு தன் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறது.இதனால் மிஷனரிகள் அட்டூழியம் அடங்கும். ஜார்ஜ் சோரஸ் வகையறாக்களின் கொட்டம் அடங்கி வழிக்கு வந்தே ஆக வேண்டும் என்கிற ரீதியிலான திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் அவர்கள். இது நம் இந்திய தேசத்தில் கெஜ்ரிவால் போன்றவர்களையும்... சர்ச் மூலமாக அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் மிஷனரி வகையறாக்களும் கதி கலங்கும் சமாச்சாரங்களாக இருக்கப் போகிறது.
நானும் கிருஸ்துவன் தான் என நாணிக்கோணி பொது வெளியில் பாம்பு டான்ஸ் போட்ட சின்னதுக்கும் சரி... முன்னாள் பார் டான்ஸருக்கும் சரி... ஆகாத விஷயங்கள் இவையெல்லாம்.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்கிறரீதியிலானவாதத்தை முன் வைத்து இயங்கும் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்....., ஜார்ஜ் சோரஸை தான் குறிவைத்து இயங்கிவருகிறார்.ஏனெனில் அவரே..... அதாவதுஜார்ஜ் சோரஸே போலாந்துகாரர் தான்.அப்படி இருக்கும் பட்சத்தில்.... அவரை நாடு கடத்தி....அல்லது நையப் புடைத்து..... என்கிற ரீதியிலான வன்மத்தை ஆழமாக இறக்கிவேலை பார்க்க சமயம் பார்த்து வருகிறார்.
இந்தியாவில் நடைபெற்ற 26/11 பின்னணியில் இந்த கும்பல் இருந்தது ஊர்ஜிதம் செய்திருக்கிறார்கள். அதனை ட்ரம்ப் காதிலும்போட்டு வைத்து இருக்கிறார்கள். கனன்று கொண்டு இருக்கிறார் அவர்.அது தவிர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை அமெரிக்க அரசுசெலவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் கவனத்தில் கொண்டு சென்று இருக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட நபரை இந்தியாவிற்கு நாடு கடத்த சட்ட ரீதியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இனி இந்த வேலை சுலபமாகும் போலிருக்கிறது.இது நடந்தால் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டுவிட்டு உலகின் எந்த மூலையில் போய் ஒளிந்து கொண்டாலும் தேடிப் பிடித்து கொண்டு வந்துவிடுவார்கள் என சொல்லாமல் சொல்ல இருக்கிறார்கள்.
அகிலேஷ் யாதவ் போன்றவர்கள் எல்லாம் பஞ்சாபில் வந்து இறங்கியவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து தலைக்கு இத்தனைலட்சம் நிதியுதவி மத்திய அரசு தர வேண்டும் என கொக்கரித்து வந்திருக்கிறது. இங்கும் பல கூகைகள் அப்படி இயங்கி வருகின்றன. சத்தமில்லாமல் சுத்தம் செய்வதை விட முச்சந்தியில் வைத்து வெள்ளாவியில் வெளுத்து எடுத்தால் தான்சரிவரும். நயாக்கனி வரை புத்தி வரும்.
நிச்சயமாக இதற்கு காலம் வரும். இனி அது வெகு தொலைவில் இல்லை.
கட்டுரை ஸ்ரீராம் பெங்களூர்