by admin on | 2025-02-06 03:52 PM
இந்தியர்களுக்கு கைவிலங்கு - மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்;
சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது; சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல.
104 இந்தியர்கள் திரும்பி வந்த விவகாரத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படவில்லை.
அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பும்போது கை விலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடும் நடைமுறை கிடையாது.
கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததால் கழிப்பறைக்குச் செல்வதற்குக் கூட அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
இந்தியர்களை மோசமாக நடத்த வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கூறியுள்ளோம்.சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு இந்தியர்களை அனுப்பிய முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி